பெங்களூரு ஏசி விரைவு ரயிலில் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து!
இலங்கையில் விடுவிக்கப்பட்ட 7 மீனவர்கள் சென்னை திரும்பினர்!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்கள் வியாழக்கிழமை காலை சென்னை வந்தடைந்தனர்.
எல்லை தாண்டி மீன்பிடிக்கும் குற்றச்சாட்டுக்காக தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து அவர்களின் படகுகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிப். 20 மற்றும் 22 ஆம் தேதிகளில் கைது செய்யப்பட்ட 7 மீனவர்களை அந்நாட்டு நீதிமன்றம் அபராதம் விதித்து விடுவித்தது.
இதனைத் தொடர்ந்து, இலங்கையில் இருந்து விமானம் மூலம் 7 மீனவர்களும் சென்னை விமான நிலையத்துக்கு இன்று காலை வந்தடைந்தனர்.
அவர்களை தமிழக அரசு தரப்பில் அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊர்களுக்கு வாகனம் மூலம் அனுப்பிவைத்தனர்.
இதனிடையே, ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்றிரவு கைது செய்தது குறிப்பிடத்தக்கது.