உதவி இயக்குநராக சேர வேண்டுமா? டிராகன் இயக்குநரின் சுவாரஸ்வமான நிபந்தனைகள்!
திருப்பூரைப் பாராட்டிய பிரதமர் மோடி!
மனதின் குரல் நிகழ்ச்சியில் திருப்பூர் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளின் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டிப் பேசினார்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இதன்படி, மார்ச் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று நடைபெற்ற 120 ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில் திருப்பூர் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளின் பணிகள் குறித்தும் பிரதமர் மோடி பேசினார்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்ததாவது, இந்தியாதான், உலகளவில் அதிக ஜவுளிக் கழிவுகளை உருவாக்கும் மூன்றாவது நாடு. ஜவுளிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதில் இந்தியா முன்னேறி வருகிறது. திருப்பூரின் சாய ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், சுத்திகரிப்பு ஆலைகளில் மறுசுழற்சி செய்யப்படுகிறது.
இதன் மூலம் கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்ட நீர், நொய்யல் ஆற்றில் கலக்கப்படுகிறது. கழிவுநீரில் இருந்து பிரித்தெடுக்கப்படும் உப்பு, பல்வேறு வகையில் பயன்படுத்தப்படுகிறது. திருப்பூரில் கழிவுநீர் சுத்திகரிக்கும் பணியும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி பணிகளும் பாராட்டப்பட வேண்டியவை என்று கூறினார்.
மேலும், யோகா நாள், நீர் சேமிப்பு, கோடைக்காலம் என்பதால் மாணவர்களுக்கான அறிவுரை குறித்தும் பிரதமர் மோடி உரையாற்றினார்.
இதையும் படிக்க:1-5ஆம் வகுப்புகளுக்கு முன்கூட்டியே தேர்வு