செய்திகள் :

`உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன; திமுக நிர்வாகிகள் கவனமாக பேசவேண்டும்'- ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை

post image

ராமேஸ்வரம் நகர் திமுக சார்பில் பட்ஜெட் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நகர் மன்ற தலைவர் நாசர் கான் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறைப்புரையாற்றிய திமுக-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ''யார் கட்சி ஆரம்பித்தாலும் பதவி கிடைக்கும் என்ற ஆசையில் இளைஞர்கள் சிலர் புதிதாக கட்சி ஆரம்பிப்பவர்களின் பின்னால் செல்கின்றனர். அவர்களின் ஆசை எல்லாம் நிராசையாக போய்விடும். தமிழ்நாட்டில் திமுக-விற்கு மாற்றாக எந்த கட்சியாலும் வர முடியாது. தமிழக முதல்வர், இப்பகுதி மீனவர்களின் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றி தருபவர். இந்த மாவட்டத்திற்கு என பல சிறப்பு திட்டங்களை ஒதுக்கி வளர்ச்சி பாதையை நோக்கி கொண்டு செல்கிறார்.

100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டிய மத்திய அரசு 4034 கோடி ரூபாயினை தராமல் உள்ளது. இதனால் வேலை செய்தவர்களுக்கு கூலி கொடுக்க முடியாத நிலை உள்ளது. இது குறித்து கேள்வி எழுப்பினால் 'ஸ்டாலின்தான் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்ல' என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திமிராக பேசுகிறார். காஷ்மீர் துவங்கி கன்னியாகுமரி வரை மோடி தான் பிரதமர். அவர் நினைத்தால் இலங்கை சிறையில் உள்ள 149 மீனவர்களையும் விடுதலை செய்ய முடியும். 5-ம் தேதி இலங்கை செல்கிறார். அவர் நம் மீனவர்களை விடுவிக்கச் செல்கிறாரா அல்லது இலங்கை அதிபரால் ரத்து செய்யப்பட்ட தனது நண்பர் அதானியின் திட்டங்களை மீண்டும் பெற்றுத்தர செல்கிறாரா என்பது அவரது பயணத்திற்கு பின் தெரிந்துவிடும்.

தி.மு.க பொதுக்கூட்டம்
ஆர்.எஸ்.பாரதி

நம் கட்சி நிர்வாகிகள் தொலைபேசி, செல்போன்களில் உரையாடும் போது கவனமாக பேசுங்கள். ஏன் எனில் நமது பேச்சுக்களை எல்லாம் மத்திய அரசு ஒட்டு கேட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் எனக்கே அந்த அனுபவம் ஏற்பட்டது. நடிகர் கருணாசை ஒரு கூட்டத்தில் பங்கேற்க செல்போன் வழியாக அழைப்பு விடுத்தேன். நான் பேசிய அடுத்த 10 நிமிடத்தில் கருணாஸிடம் பேசினீர்களா என நமது கட்சியின் நிர்வாகி என்னிடம் கேட்டார். நான் பேசியது உங்களுக்கு எப்படி தெரியும் என அவரிடம் கேட்டேன். நீங்கள் கருணாஸிடம் பேசியதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மத்திய உளவுத்துறையினர் என்னிடம் கேட்டனர் என அவர் பதில் சொன்னார்.

இதில் இருந்தே தெரிகிறது. இதயம் இருக்க வேண்டிய இடத்தில் இரும்பை வைத்திருக்கும் மோடி ஆட்சியில் எல்லாவற்றையும் ஒட்டு கேட்பார்கள் என. எனவே கட்சி நிர்வாகிகள் கவனமாக பேசுங்கள் என்று எச்சரிக்கையாக சொல்கிறேன். தமிழ் மொழிக்காக போராடியவர்களுக்கு வழங்கப்பட்ட கோட்டாவின் வழியாக எம்.பி.பி.எஸ் படித்தவர் தமிழிசை. இன்றைக்கு அதை மறந்துவிட்டு தமிழுக்கு எதிராக பேசுகிறார்'' என்றார்.

`வெறுப்பை உமிழ்வதற்கல்ல சினிமா' - மீண்டும் மீண்டும் முல்லைப் பெரியாறை சீண்டும் கேரள சினிமாக்காரர்கள்

தற்போது, திரையில் ஓடிக்கொண்டிருக்கும் மலையாள சினிமாவான ‘எம்புரான்’ படத்துக்கு, பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் என்று காவிகள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. 'கோத்ரா கலவரப் பின்னணியைக் காட்டியுள... மேலும் பார்க்க

'என் அப்பா பணத்தை தவறான வழியில்...' - ஆதவ் அர்ஜூனா மீது லாட்டரி மார்ட்டின் மகன் கடும் விமர்சனம்

பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜூனா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்தார். விசிக திமுக கூட்டணியில் இருந்தபோதும் ஆதவ் அர்ஜூனா திமுக மீது தொடர்ந்து பல்வேற... மேலும் பார்க்க

`ஓய்வு குறித்து விவாதிக்க ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் சென்றாரா பிரதமர் மோடி?’ - பரவும் தகவலின் பின்னணி

பிரதமராக நரேந்திர மோடி 2014-ம் ஆண்டு பதவியேற்ற பிறகு கடந்த 10 ஆண்டில் ஒரு முறை கூட ஆர்.எஸ்.எஸ்.தலைமை அலுவலகத்துக்கு சென்றது கிடையாது. தாய் இயக்கமான ஆர்.எஸ்.எஸ்.. பா.ஜ.கவின் வெற்றிக்காக தொடர்ந்து பாடுப... மேலும் பார்க்க

"ரூ.85,000 கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்திருக்கு..! " - கேள்வி எழுப்பும் அன்புமணி ராமதாஸ்

சீன கார் நிறுவனத்தின் ரூ.85,000 கோடி முதலீட்டை தமிழக அரசு இழந்துவிட்டதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இது குறித்து அன்புமணி ராமதாஸ், " சீனாவைச் சேர்ந்த மின்சார மகிழ... மேலும் பார்க்க

`நீட் ரகசியம் கேட்டால், உசேன் போல்டை விட வேகமாக ஓடுகிறார் உதயநிதி’ - ஆர்.பி.உதயகுமார் காட்டம்

மதுரை திருமங்கலம் ஒன்றியத்தில் நடந்த அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "தமிழக முழுவதும் 234 தொகுதிகளில் 68,500 வாக்குச்சாவடிகள் உள்ளது. இதில் பூத... மேலும் பார்க்க