தேசிய சாதனை படைத்த இந்திய வீரர்! 22 மில்லி செகன்டில் இழந்த உலக சாம்பியன்ஷிப் தகுதி!
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் உலக தடகள கான்டினென்டல் டூரில் பங்குபெற்ற இந்திய வீரர் குல்வீர் சிங் 10,000 மீ ஓட்டப் பந்தயத்தில் புதிய தேசிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த தடகள வீரர் குல்வீர் சிங் 10,000 மீ ஓட்டப் பந்தயத்தில் 27:00:22 வினாடிகளில் கடந்து புதிய தேசிய சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்பாக கடந்தாண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்பில் இவரே 27:14.88 வினாடிகளில் வெண்கலத்தை வென்றிருந்தார்.
தற்போது, குல்வீர் சிங்கே தனது சொந்த சாதனையை முறியடித்து இந்திய அளவில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
உலக சாம்பியன்ஷிப்பில் வாய்ப்பு இழப்பு!
26 வயதாகும் குல்வீர் சிங் உலக தடகள கான்டினென்டல் டூரில் 20 மில்லி செகன்டில் உலக சாம்பியன்ஷிப் தகுதிக்கான வாய்ப்பை இழந்தார்.
கடந்தாண்டு ஜப்பானில் ஓடியதைவிட வேகமாக ஓடினாலும் உலக சாம்பியன்ஷிப் தகுதிக்கான வாய்ப்பை 20 மில்லி செகன்டில் ( மில்லி வினாடி) இழந்தது இந்தியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவரது விடியோவை இந்திய தடகள கூட்டமைப்பு தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து தேசிய சாதனைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
India's Gulveer Singh on his way to national 10,000m track record on Saturday night in USA. He finished 6th with a time of 27:00.22 to better his own nat record of 27:14.88. pic.twitter.com/0HxJVKZPSi
— Athletics Federation of India (@afiindia) March 30, 2025