உதவி இயக்குநராக சேர வேண்டுமா? டிராகன் இயக்குநரின் சுவாரஸ்வமான நிபந்தனைகள்!
மகாராஷ்டிரம்: மசூதியில் ஜெலட்டின் குச்சிகள் வெடிப்பு; 2 பேர் கைது
மகாராஷ்டிரத்தில் மசூதியில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம், பீட் மாவட்டத்தில் உள்ள மசூதியில் கைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சிகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரென வெடித்தன. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும், இதில் கட்டடத்தின் உள் பகுதி சேதமடைந்தது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்கள் மீது சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். சம்பவம் குறித்து கிராமத் தலைவர் அதிகாலை 4 மணியளவில் தலவாடா போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் கிடைத்ததும், பீட் காவல் கண்காணிப்பாளர் நவ்னீத் கன்வத் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
செவிலியர்கள் அலட்சியம்! பிறந்த குழந்தை பலி!
பின்னர் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்புப் பிரிவு மற்றும் தடயவியல் அறிவியல் குழுவும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். நபர் ஒருவர் மசூதியின் பின்புறம் இருந்து உள்ளே நுழைந்து அங்கு சில ஜெலட்டின் குச்சிகளை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இது வெடிப்பை ஏற்படுத்தியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. சட்டம் ஒழுங்கு தொடர்பான எந்த பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க கிராமத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.