செய்திகள் :

ஈரோடு: ஆசிட் டேங்கர் லாரி சுத்தம் செய்யும் பணியின்போது மூச்சுத்திணறி இருவர் உயிரிழப்பு!

post image

பவானி: சித்தோடு அருகே ஆசிட் டேங்கர் லாரியை சுத்தம் செய்தபோது இருவர் உயிரிழந்தனர்.

ஈரோடு மாவட்டம், சித்தோட்டை அடுத்த கோணவாய்க்கால், ராமன் பாலக்காட்டைைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் யுவானந்த வேல்(45). இவருக்கு சொந்தமான சர்வீஸ் ஸ்டேஷனில் சாயக்கழிவு நீரை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ஆசிட் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரியை சுத்தம் செய்யும் பணி இன்று(மார்ச் 30) நடைபெற்றது.

சித்தோட்டை அடுத்த பெருமாள் மலை, ஆர் என். புதூரைச் சேர்ந்த சண்முகம் மகன் செல்லப்பன் (52) என்பவர் லாரி டேங்கருக்குள் முகத்தில் துணி கட்டிக்கொண்டு இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது, ஆசிட் வீரியம் தாங்காமல் கண் எரிச்சல் ஏற்பட்டதோடு, மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதைக் கண்ட யுவானந்த வேல் மற்றும் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சந்திரன் (54) டேங்கருக்குள் இறங்கி செல்லப்பனை மீட்டு வெளியே அனுப்பினர்.

இதனிடையே, எவ்வித பாதுகாப்பும் இல்லாமல், டேங்கருக்குள் இறங்கிய மேற்கண்ட இருவரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு டேங்கருக்குள் மயங்கி விழுந்தனர். இதைக்கண்ட அப்பகுதியினர் பவானி தீயணைப்பு நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் பழனிச்சாமி தலைமையில் விரைந்த தீயணைப்பு படையினர், பாதுகாப்பு உபகரணங்களுடன் டேங்கருக்குள் இறங்கி அங்கே மயங்கிக் கிடந்த இருவரையும் மீட்டு, பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் அவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரிய வந்தது.

இதையடுத்து இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மற்றொரு தொழிலாளி செல்லப்பன், பவானி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைநகரை சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்ற வேண்டும்: பேரவையில் காரசாரம்

தமிழகத்தின் தலைநகரை மாற்ற வேண்டும் என பாஜக எம்எல்ஏ வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவின் தலைநகரை சென்னைக்கு மாற்ற வேண்டும் என அவைத் தலைவர் கோரிக்கை வைத்ததால் அவையில் கலகலப்பான சூழல் ஏற்பட்டது.தமிழ... மேலும் பார்க்க

நீலகிரி செல்வோர் கவனத்துக்கு... திருப்பி அனுப்பப்படும் வாகனங்கள்!

நீலகிரிக்கு வருகை தரும் வாகனங்களுக்கு இன்று(ஏப்ரல் 1) முதல் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்ட நிலையில், இ-பாஸ் பெறாத வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.நீலகிரியில் அளவுக்கு அதிகமான வாகனங்... மேலும் பார்க்க

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு

சென்னை: தமிழகத்தின் பெருமைமிகு வேளாண் உற்பத்திப் பொருள்களில் முக்கியமானதாக விளங்கும் கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்க மாலை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.ஒரு குறிப்பிட்ட ப... மேலும் பார்க்க

திருச்சி நூலகத்திற்கு காமராஜர் பெயர்: முதல்வர் அறிவிப்பு

திருச்சியில் புதிதாக அமையவுள்ள நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். மேலும் பார்க்க

குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு!

குரூப் 1 மற்றும் 1ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.குரூப் 1 முதல்நிலைத் தேர்வு வரும் ஜூன் மாதம் 15ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்ப... மேலும் பார்க்க

கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணை: அமைச்சர் துரைமுருகன்

பெரம்பலூர் மாவட்டம் கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணைக் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.சனி, ஞாயிறு மற்றும் ரமலான் பண்டிகையால் திங்கள்கிழமை... மேலும் பார்க்க