உதவி இயக்குநராக சேர வேண்டுமா? டிராகன் இயக்குநரின் சுவாரஸ்வமான நிபந்தனைகள்!
அமெரிக்கா: சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்கள் எண்ணிக்கை குறைவு!
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் சுமார் 18,000 இந்தியா்கள் சட்டவிரோதமாகக் குடியேறி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றவுடன், அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவா்களை வெளியேற்றவுள்ளதாக அறிவித்தார்.
அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பையடுத்து, அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களைக் கைது செய்து, அவர்களை நாடுகடத்தும் பணியில் அந்நாட்டு அரசு மும்முரம் காட்டி வருகிறது.
இதனிடையே, அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அமெரிக்க நாட்டின் எல்லைப் பாதுகாப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில், கடந்தாண்டு டிசம்பரில் 5,600 பேர் பிடிபட்ட நிலையில், ஜனவரி மாதம் 3,132 மட்டுமே பிடிபட்டனர். இந்த எண்ணிக்கை பிப்ரவரி மாதம் 1,628-ஆக மேலும் குறைந்தது.
இதையும் படிக்க:செவிலியர்கள் அலட்சியம்! பிறந்த குழந்தை பலி!