கே.எல்.ராகுல் சேர்ப்பு: தில்லிக்கு எதிராக சன்ரைசர்ஸ் பேட்டிங் தேர்வு!
Coonoor: குன்னூர் நகராட்சி மார்க்கெட்டில் தீ விபத்து; நள்ளிரவில் கடைகள் எரிந்து சேதம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகரின் மையப்பகுதியில் நகராட்சி நிர்வாகத்திற்குச் சொந்தமான ஒருங்கிணைந்த சந்தை செயல்பட்டு வருகிறது.
நூற்றாண்டு பழைமை வாய்ந்த இந்த சந்தையில் உள்ள கடைகளை வணிகர்கள் மாத வாடகை செலுத்தி வணிகம் செய்து வருகின்றனர்.
பழைமையான இந்த மார்கெட் கடைகளை இடித்து விட்டு புதிய கடைகளை கட்டிக் கொடுக்க அரசு தரப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கட்டுமானத்தை தொடங்கவும் மாற்றிடத்தில் தற்காலிக கடைகளை அமைப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், நேற்றிரவு சுமார் 11 மணியளவில் ஒரு கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. வேகமாக அருகில் இருந்த 10-க்கும் அதிகமான கடைகளுக்கு தீ பரவியிருக்கிறது.
தகவலறிந்து விரைந்த குன்னூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைக்க போராடியுள்ளனர். கட்டுக்கடங்காத தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்த நிலையில், ராணுவ வீரர்களும் தீயை அணைக்க களமிறங்கியுள்ளனர். விடிய விடிய போராடி அதிகாலையில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் நகைக்கடைகள், பேன்சி கடை, துணிக்கடை உள்ளிட்ட 16 கடைகள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது.
தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாழ்வாதாரமாக விளங்கி வந்த கடைகளும் முதலீடும் தீயில் சாம்பலானதால் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
