குணால் கம்ரா ஷோ சர்ச்சை: மும்பைக்கும் பரவிய புல்டோசர் கலாசாரம்; யோகி ஆதித்யநாத்த...
Empuraan: `மனம் வருந்துகிறோம்' - எம்புரான் பட சர்ச்சை தொடர்பாக மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன்லால்!
மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கி வெளியாகியுள்ள திரைப்படம் எம்புரான். வெற்றிகரமாக வசூலைக் குவித்துவரும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள கலவரம் சார்ந்த காட்சிகள் 2002 குஜராத் கலவரத்தை நினைவுபடுத்தும் விதமாக இருப்பதாகவும் வகுப்புவாத பிரிவினையைத் தூண்டுவதாகவும் சர்ச்சை எழுந்தது.
சர்ச்சை விரிவடைந்ததைத் தொடர்ந்து படக்குழுவினர் படத்தின் சில காட்சிகளை நீக்கியுள்ளனர். எனினும் வலதுசாரி ஆதரவாளர்கள் மோகன்லாலுக்கு தொடர்ந்து கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் எம்புரான் படத்தின் காட்சிகளுக்காக வருத்தம் தெரிவித்துள்ளார் நடிகர் மோகன்லால்.
Mohanlal பதிவு
அவர் வெளியிட்டுள்ள பதிவில், "லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் படத்தின் உருவாக்கத்தின்போது எடுத்துக்கொள்ளப்பட்ட சில அரசியல் மற்றும் சமூக கருப்பொருட்கள், என் அன்பிற்குரியவர்களுக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அறிகிறேன்.
ஒரு கலைஞனாக என்னுடைய எந்த ஒரு திரைப்படமும் எந்தவொரு அரசியல் இயக்கம், சித்தாந்தம் அல்லது மதக் குழுவிற்கும் விரோதமானதாக இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது என் கடமை.
ஆகையால், நானும் எம்புரான் குழுவினரும் என் அன்பிற்குரியவர்களுக்கு ஏற்பட்டுள்ள துயரத்துக்கு மனம் வருந்துகிறோம். மேலும் அதற்கான பொறுப்பு படத்தின் பின்னணியில் பணியாற்றிய அனைவருக்கும் உள்ளது என்பதை உணர்ந்து, சர்ச்சைக்குரிய கருப்பொருட்களை படத்திலிருந்து நீக்குவது என எல்லாரும் இணைந்து முடிவு செய்துள்ளோம்.
கடந்த நான்கு தசாப்தங்களாக நான் உங்களில் ஒருவனாகவே என் திரை வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். உங்கள் அன்பும் நம்பிக்கையுமே என் பலம். அதைவிடச் சிறப்பாக மோகன்லால் என்றொருவன் கிடையாது என நினைக்கிறேன்... " என எழுதியுள்ளார்.