சொகுசு கப்பலில் பரவிய நோரோ வைரஸ்: 200 பயணிகளுக்கு நோய் பாதிப்பு!
L2 Empuraan: தவறாகச் சித்தரிக்கும் காட்சிகள்; நீக்கக்கோரி விவசாய சங்கம் போராட்டம் அறிவிப்பு
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் எம்புரான் திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்தப்படம் 2019-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற லூசிஃபர் படத்தின் 2 ஆம் பாகம். இந்தத் திரைப்படத்தில் 2002 குஜராத் கலவரத்தைத் தொடர்புபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி இப்படத்திற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் படத்தின் வில்லன் காதாபாத்திற்கு குஜராஜ் கலவர வழக்கில் தொடர்புடையவரின் பெயரையும் வைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய 17 இடங்களை வெட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில் எம்புரான் திரைப்படத்தில் முல்லைப்பெரிாயறு அணை குறித்தும் தவறாக சித்தரித்திருப்பதாகவும், பிருத்விராஜ் தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக பொய் பிரசாரம் செய்து வருவதாகவும் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
படத்தின் இயக்குனர் நடிகர் பிருதிவிராஜ், படத்திற்கும் அதன் போக்கிற்கும் தொடர்பே இல்லாமல்,முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக வன்மத்தை காட்டியுள்ளார். நெடும்பள்ளி டேம் என்று மாற்றுப்பெயரிட்டு, முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராகக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. இப்படத்தில் கதாநாயகி மஞ்சு வாரியார், முல்லைப் பெரியாறு அணையை மையப்படுத்தி பேசும் காட்சி கண்டிக்கத்தக்கது.

முல்லைப்பெரியாறு அணை இருக்கும் பகுதியை, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்குள் அடங்கி இருந்த திருவிதாங்கூர் ராஜா,999 வருடங்களுக்கு இனாமாக எழுதிக் கொடுத்தாராம். எழுதி வாங்கிய பிரிட்டீஷ்காரன் போய்விட்டானாம், மன்னராட்சியும் போய் விட்டதாம், ஆனாலும் அந்த ஆபத்து மக்களைக் காவு வாங்க காத்து நிற்கிறது என வசனம் பேசியுள்ளார்.
இரண்டு ஷட்டரை திறந்தாலே, மக்கள பலிவாங்குற அணையை, அதாவது முல்லைப்பெரியாறு அணையை, குண்டு வைத்து தகர்த்தால், கேரளம் மறுபடியும் தண்ணீருக்குள் மூழ்கும். அணையை காப்பாற்ற செக் டேம் எனும் சுவர்களால் பயனில்லை, அணையே இல்லாமல் இருந்தால் தான் சரி என்பன போன்ற வசனங்களும் படத்தில் இடம்பெறுகின்றன. இதுபோன்ற திரைப்படம் தமிழக-கேரள மாநில உறவை கெடுப்பதற்கு மட்டுமே உதவும் என்பதை பிரித்துவிராஜ் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கியது போல முல்லைப் பெரியாறு அணை தொடர்பான காட்சிகளை நீக்கிவிட்டு படத்தைத் திரையிடாவிட்டால், படத்தின் தயாரிப்பாளர் தமிழகத்தில் நடத்தும் நிறுவனங்கள் முன் போராட்டம் நடத்துவோம். முதலில் தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள கோகுலம் சிட்பண்ட்ஸ் முன்பாக போராட்டத்தைத் தொடங்க உள்ளோம்" என அறிவித்துள்ளனர்.