புவனேஸ்வரில் பல்கலை. விடுதியில் முதுகலை மாணவர் சடலம் மீட்பு
புவனேஸ்வரில் உள்ள பல்கலைக்கழக விடுதியில் இருந்து முதுகலை மாணவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள உத்கல் பல்கலைக்கழக விடுதி வளாகத்திற்குள் ஞாயிற்றுக்கிழமை காலை முதுகலை மாணவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் பல்கலைக்கழகத்தின் முதுகலை மாணவர் தபஸ் ரஞ்சன் நாயக் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இரத்த வெள்ளத்தில் கிடந்த அவர் விடுதியின் கூரையிலிருந்து விழுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், சாஹித் நகர் காவல் நிலைய அதிகாரிகள் அங்கு விரைந்தனர்.
பின்னர் மாணவரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராமேசுவரம்: தாயகம் திரும்பும் இலங்கை அகதிகள்! உதவுகேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை
மாணவரின் இறப்பிற்கான காரணத்தை அறிய விசாரணை நடந்து வருகிறது. மாணவர் கூரையிலிருந்து தவறி விழுந்தாரா அல்லது ஏதேனும் தவறான செயல் உள்ளதா என்பது விசாரணைக்குப் பிறகு தெரியவரும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
இச்சம்பவம் அப்பல்கலைக்கழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.