குணால் கம்ரா ஷோ சர்ச்சை: மும்பைக்கும் பரவிய புல்டோசர் கலாசாரம்; யோகி ஆதித்யநாத்த...
தாணேவில் தடை செய்யப்பட்ட 238 இருமல் சிரப் பாட்டில்கள் பறிமுதல்
தாணேயில் தடை செய்யப்பட்ட 238 கோடீன் இருமல் சிரப் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தின் ஷில் டைகர் பகுதியில் வெள்ளிக்கிழமை மதியம் இருசக்கர வாகனத்தில் 22 வயது நபரைப் பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இரண்டு பெட்டிகளில் தடை செய்யப்பட்ட கோடீன் வகை இருமல் சிரப் பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன.
இதையடுத்து 238 இருமல் சிரப் பாட்டில்களை போலீஸார் கைப்பற்றினர்.
டாக்ஸி ஓட்டுநரான அந்த நபரின் இரு சக்கர வாகனம், ரூ.1,800 ரொக்கம் மற்றும் மொபைல் போன் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னர் போதைப்பொருள் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீஸார், இளைஞரை கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட இருமல் சிரப் பாட்டிலின் மதிப்பு ரூ.53,550 இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.