செய்திகள் :

ராமேசுவரம் மீனவர்கள் 11 பேர் கைது!

post image

ராமேசுவரம்: கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் மற்றும் அவர்களின் விசைப்படகை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து 454 விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று புதன்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

கச்சத்தீவு – நெடுந்தீவக்கு இடையே நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகை சிறைபிடித்தனர்.

அந்த படகில் பாக்கிய ராஜ் 38, சவேரியார் அடிமை 35, முத்து களஞ்சியம் 27, எபிரோன் 35, ரஞ்சித் 33, பாலா 38, யோவான்ஸ் நானன், இன்னாசி 37, ஆர்னாட் ரிச்சே 36, அன்றன் 45, அந்தோணி சிசோரியன் 43 ஆகிய 11 மீனவர்களை கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.

11 மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிந்து சிறையில் அடைக்க உள்ளதாக இலங்கை மீன்வளத்துறை(நீரியல்துறை) அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மீனவ சங்கத் தலைவர் காரல் மார்க்ஸ் கூறுகையில்:

”தமிழகத்தில் இருந்து வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படையினர் கைது செய்து வருகின்றனர். இலங்கையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுருத்தி வருகிறோம்.

இதே கோரிக்கையை வலியுருத்தி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்துள்ளோம். பிரதமர் ஏப்ரல் 5 ஆம் தேதி இலங்கை செல்லவுள்ள நிலையில் மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்த இடத்தில் மீன்பிடிக்க உரிய அனுமதியை பெற்றுத்தர வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிக்க : இலங்கையில் விடுவிக்கப்பட்ட 7 மீனவர்கள் சென்னை திரும்பினர்!

ராமேசுவரத்தில் விற்கப்படும் தா்ப்பூசணி பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் ஆய்வு

ராமேசுவரத்தில் சிவப்பு வண்ணம் ஊசி மூலம் செலுத்தப்பட்டு தா்ப்பூசணி பழங்கள் விற்கப்படுகின்றனவா என உணவு பாதுகாப்புத்துறை அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். ராமேசுவரம் பகுதியில் கோடை காலம் தொடங்கிய நில... மேலும் பார்க்க

மத்திய பாதுகாப்புப் படையினா் போதை எதிா்ப்பு சைக்கிள் பேரணி

திருவாடானை அருகே தொண்டியில் மத்திய பாதுகாப்பு படை வீரா்கள் சாா்பில் போதை எதிா்ப்பு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மத்திய பாதுகாப்பு படை வீரா்கள் துணை தளபதிகள் ஸ்ரீனிவாசன், ... மேலும் பார்க்க

தொண்டியில் கடலோர போலீஸாா் தீவிரவாத தடுப்பு ஒத்திகை

திருவாடானை அருகே தொண்டி கடல் பகுதி, சாலையில் கடலோர போலீஸாா் ‘சஜாக்’ தீவிரவாத தடுப்பு ஒத்திகையில் சனிக்கிழமை ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் வழியாகவும், சாலை வழியாகவும் தீவிரவாதிகள் ஊடுருவுவத... மேலும் பார்க்க

கடலாடி தாலுகா அலுவலகத்தில் உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் ரூ.60 லட்சம் முறைகேடு! 2 போ் கைது!

கடலாடி தாலுகா அலுவலகத்தில் உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய சேவைக் கட்டணம் ரூ.60 லட்சத்தை முறைகேடு செய்ததாக 2 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ... மேலும் பார்க்க

புதிதாக கட்டப்பட்ட தேவிப்பட்டினம் காவல் நிலையம் திறப்பு

தேவிப்பட்டினம் காவல் நிலையத்தை காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்ததையடுத்து, இங்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்... மேலும் பார்க்க

பருவம் தவறி பெய்த மழையால் 800 ஏக்கா் மிளகாய் பயிா்கள் சேதம்

முதுகுளத்தூா் அருகே பருவம் தவறிய மழை, பனிப்பொழிவு காரணமாக 800 ஏக்கரில் பயிரிட்ட சம்பா மிளகாய் செடியிலேயே அழுகியதால் விவசாயிகள் வேதனையடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே கிடாத்திருக்கை ... மேலும் பார்க்க