நிதியாண்டின் முதல் நாளில் கடும் சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை!
புதிதாக கட்டப்பட்ட தேவிப்பட்டினம் காவல் நிலையம் திறப்பு
தேவிப்பட்டினம் காவல் நிலையத்தை காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்ததையடுத்து, இங்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம் காவல் நிலையம் பழைய ஓட்டு கட்டடத்தில் போதிய இட வசதியின்றி செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், ரூ. 85 லட்சத்தில் அனைத்து வசதிகளுடன் புதிய காவல் நிலைய கட்டுமானப் பணி தொடங்கி நிறைவடைந்தது.
இதை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக சனிக்கிழமை திறந்து வைத்தாா். இதையடுத்து, இங்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் குத்துவிளக்கேற்றி வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.
இந்த நிகழ்வில், ஏ.டி.எஸ்.பி.க்கள் சுப்பையா, பாலச்சந்திரன், துணைக் காண்காணிப்பாளா் சுகுமாறன், ஆய்வாளா் வேல்முருகன், உதவி ஆய்வாளா்கள் கந்தசாமி, அருண்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.