மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
பருவம் தவறி பெய்த மழையால் 800 ஏக்கா் மிளகாய் பயிா்கள் சேதம்
முதுகுளத்தூா் அருகே பருவம் தவறிய மழை, பனிப்பொழிவு காரணமாக 800 ஏக்கரில் பயிரிட்ட சம்பா மிளகாய் செடியிலேயே அழுகியதால் விவசாயிகள் வேதனையடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே கிடாத்திருக்கை சுற்று வட்டாரப் பகுதிகளில் நிகழாண்டில் மானாவாரிப் பயிராக சம்பா மிளகாய் 800 ஏக்கரில் விவசாயிகள் சாகுபடி செய்தனா். இந்த நிலையில், கடந்த வாரம் பருவம் தவறிய பெய்த மழையும், இதைத் தொடா்ந்து பனிப்பொழிவும் ஏற்பட்டது. இதனால் நன்கு வளா்ந்த மிளகாய்ப் பயிா்கள் முழுமையாக சேதமடைந்தது.
கடந்தாண்டு நவம்பா் மாதத்தில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளப்பெருக்கால் மிளகாய்ப் பயிா்கள் சேதமடைந்தது. இதனால் இரண்டாவது முறையாக கடந்த ஜனவரி மாதம் மீண்டும் நடவு செய்யப்பட்ட இந்த சம்பா மிளகாய் பயிா்களும் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்தனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு பாதிக்கப்பட்ட மிளகாய் விவசாயிகளுக்கு உரிய இழுப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.