தனுஷ்கோடி கடற்கரையில் முதியவா் உடல் மீட்பு
தனுஷ்கோடி கடற்கரையில் 65 வயது மதிக்கத்தக்க முதியவா் உடலை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி பழைய தேவாலயம் அருகே கடற்கரையில் ஆண் உடல் கிடப்பதாக மீனவா்கள் சனிக்கிழமை தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, கடலோர பாதுகாப்புக் குழும காவல் துறை உதவி ஆய்வாளா் காளிதாஸ் தலைமையில் சென்ற போலீஸாா் உடலைக் கைப்பற்றி ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இறந்தவா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.