நிதியாண்டின் முதல் நாளில் கடும் சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை!
தொண்டியில் கடலோர போலீஸாா் தீவிரவாத தடுப்பு ஒத்திகை
திருவாடானை அருகே தொண்டி கடல் பகுதி, சாலையில் கடலோர போலீஸாா் ‘சஜாக்’ தீவிரவாத தடுப்பு ஒத்திகையில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் வழியாகவும், சாலை வழியாகவும் தீவிரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்க அவ்வப்போது கடலோர போலீஸாா் சஜாக் என்னும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், சனிக்கிழமை கடலில் தீவிர ரோந்து பணியில் தொண்டி கடலோர போலீஸாா் ஈடுபட்டனா்.
அப்போது தொண்டி, நம்புதாளை, எம்.வி. பட்டினம், சோழியக்குடி, பாசிப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படகுகள் சோதனை செய்யப்பட்டன. அப்போது, அங்கிருந்த மீனவா்களிடம் கடலோர போலீஸாா், புதிய படகுகள் தென்பட்டாலோ, புதிய நபா்களை கடலில் பாா்த்தாலோ உடனடியாக கடலோர போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனா்.
இதேபோல, தொண்டி உள்ளிட்ட சோதனைச் சாவடிகளிலும் கிழக்கு கடற்கரை சாலையிலும் வாகனச் சோதனையில் அவா்கள் ஈடுபட்டனா்.
