செய்திகள் :

'எடப்பாடி பழனிசாமி, வேலுமணிக்கு அடுத்து அண்ணாமலை' - அடுத்தடுத்து டெல்லி விசிட்; காரணம் என்ன?

post image

நேற்று முன்தினம், தமிழ்நாட்டில் பரபரப்பாக சட்டப்பேரவை நடந்துகொண்டிருக்க, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியோ டெல்லிக்கு பயணமானார்.

'அதிமுக அலுவலகத்தை காண' என்று எடப்பாடி பழனிசாமி கூறினாலும், அன்று மாலை முன்னாள் அமைச்சர் மற்றும் இப்போதைய அதிமுக கொறடா எஸ்.பி வேலுமணியும் டெல்லிக்கு சென்றார்.

இதனையடுத்து, இரண்டு பேரும் கடந்த செவ்வாய்க்கிழமை (25.03.2025) இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தனர்.

அமித் ஷா பதிவு

இந்த சந்திப்பிற்கு பிறகு, அமித் ஷா, "2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி - தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் பயண பின்னணி
அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி - தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் பயண பின்னணி

எடப்பாடியின் விளக்கம் என்ன?

ஆனால், இதற்கு நேர்மாறாக, எடப்பாடி பழனிசாமி, "கூட்டணி பற்றி பேசுவதற்கு இன்னும் நிறைய நாள்கள் இருக்கின்றன. இப்போது அமித் ஷாவிடம் 100 நாள் வேலைத் திட்டத்துக்கு மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்,

எஸ்.எஸ்.ஏ (SSA) கல்வித் திட்டத்தில் தமிழக அரசுக்கு விடுவிக்க வேண்டிய தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்,

தமிழ்நாட்டின் இரு மொழிக் கொள்கை தொடர வேண்டும்,

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பைத் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் நடத்த வேண்டும்,

கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் போன்ற மக்கள் கோரிக்கைகளைப் பற்றித்தான் 45 நிமிடங்கள் பேசினோம்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. கூட்டணி பற்றி பேசுவதற்கும் இன்னும் நிறைய கால அவகாசம் இருக்கிறது" என்று டெல்லி பயணம் குறித்து விளக்கமளித்தார்.

அண்ணாமலை எதற்கு செல்கிறார்?

எடப்பாடி பழனிசாமி, வேலுமணி டெல்லி விசிட்டிற்கு பிறகு, இன்று அண்ணாமலையும் டெல்லிக்கு செல்கிறார்.

இந்தப் பயணத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தலைமையுடன் ஆலோசனை நடத்துவார் அண்ணாமலை என்று எதிர்பார்க்கப்படுகிறது.

`உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன; திமுக நிர்வாகிகள் கவனமாக பேசவேண்டும்'- ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை

ராமேஸ்வரம் நகர் திமுக சார்பில் பட்ஜெட் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நகர் மன்ற தலைவர் நாசர் கான் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறைப்புரையாற்றிய திமுக-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ''யார் கட... மேலும் பார்க்க

'இது கட்டமைக்கப்பட்ட சுரண்டல்!' ஏ.டி.எம்மில் பணம் எடுத்தால் ரூ.23 வரை கட்டணம்- RBI; ஸ்டாலின் கண்டனம்

வரும் மே மாதம் முதல், ஒரு மாதத்தில் குறிப்பிட்ட அளவிற்கு மேல் ஏ.டி.எம்களில் எடுக்கப்படும் பணத்திற்கு ரூ.2-ல் இருந்து ரூ.23 வரை வங்கிகள் கட்டணம் விதிக்கலாம் என்று கடந்த வெள்ளிக்கிழமை இந்திய ரிசர்வ் வங்... மேலும் பார்க்க

``ஒரு வார்டு எலெக்‌ஷனில்கூட நிற்கவில்லை; அதற்குள் அடுத்த முதல்வராம்’’ - திருமா காட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் பேருந்து நிலையம் அருகிலுள்ள தென்பள்ளிப்பட்டில், வி.சி.க தேர்தல் அங்கீகார வெற்றி விழா நேற்று இரவு நடைபெற்றது. வி.சி.க மகளிர் விடுதலை இயக்கம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்... மேலும் பார்க்க

"19 மாணவச் செல்வங்களின் உயிர்களுக்கு பதில் என்ன?" - தனுஷ் டு தர்ஷினி நீட் மரணங்கள் - இபிஸ் கேள்வி!

நீட் தேர்வு பயத்தினால் தற்கொலை செய்துகொண்ட தேவதர்ஷினி குறித்து தனது எக்ஸ் தளத்தில் தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டிருக்கிறார். அதில், "நீட் தேர்வு அச்சத்தால் சென்னையில் தர்ஷின... மேலும் பார்க்க

உயிரை மாய்த்த மாணவி... தொடரும் நீட் மரணங்கள்; "இது பச்சை படுகொலை!"- சீமான், அன்புமணி கண்டனம்!

சென்னை ஊரப்பாக்கத்தை சேர்ந்த மாணவி தேவதர்ஷினி. இவர் நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து நீட் தேர்விற்காக தயாராகி வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு, பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த இவர், இதுவரை மூன்று முறை நீட்... மேலும் பார்க்க

`குரங்கு கையில் பூமாலையாக கிழக்கு மாவட்ட திமுக' - விமர்சித்த சுரேஷ்ராஜன்... குமரி சலசலப்பு!

கன்னியாகுமரி மேற்கு மாவட்டம், பத்மநாபபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வான தி.மு.க-வைச் சேர்ந்த மறைந்த டாக்டர் ஆல்பனின் 26-வது நினைவுநாள் பொதுக்கூட்டம் ஆற்றூர் பகுதியில் நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசி... மேலும் பார்க்க