உயிரை மாய்த்த மாணவி... தொடரும் நீட் மரணங்கள்; "இது பச்சை படுகொலை!"- சீமான், அன்புமணி கண்டனம்!
சென்னை ஊரப்பாக்கத்தை சேர்ந்த மாணவி தேவதர்ஷினி. இவர் நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து நீட் தேர்விற்காக தயாராகி வருகிறார்.
கடந்த 2021-ம் ஆண்டு, பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த இவர், இதுவரை மூன்று முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால், போதிய அளவு மதிப்பெண் பெறாததால் நான்காவது முறையாக நீட் தேர்வு எழுத தயாராகி வந்துள்ளார்.
'இந்த முறையும் நல்ல மதிப்பெண் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது? என்ற பயத்தில் இருந்துவந்துள்ளார். இவருக்கு பெற்றோர்கள் ஆறுதல் கூறியுள்ளனர். ஆனாலும், பயத்தில் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

ஏற்கெனவே நீட் தேர்வுக்கு பல எதிர்ப்பு குரல்கள் எழுந்தவண்ணம் இருக்கும் நிலையில், இவரது இறப்பிற்கு பிறகு, மீண்டும் இந்தக் குரல்கள் வலுத்துள்ளன.
'#NEETKills', '#Socialinjustice' என்று மாணவியின் தற்கொலைக்கு பாமக கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை...
"நீட் அச்சத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை: மாணவர்கொல்லி நீட் தேர்வுக்கு முடிவு கட்ட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வில் போதிய மதிப்பெண்களை எடுக்க முடியாதோ? என்ற அச்சத்தில் சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் தர்ஷினி என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தர்ஷினியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பயம்... தற்கொலை...
கிளாம்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி தர்ஷினி ஏற்கெனவே இருமுறை நீட் தேர்வு எழுதியும் போதிய மதிப்பெண்களை பெற முடியாததால் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை. இந்த முறையாவது மருத்துவப் படிப்பில் சேர்ந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் தர்ஷினி பயின்று வந்தார். நீட் தேர்வுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், தம்மால் போதிய மதிப்பெண் பெற முடியாதோ? என்ற அச்சத்தில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு அச்சத்தால் நடப்பு மார்ச் மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட இரண்டாவது மாணவி தர்ஷினி ஆவார். இதற்கு முன் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தையடுத்த தாதாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இந்துமதி என்ற மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு 8 ஆண்டுகளாகியும் தற்கொலைகள் தொடர்வது பெரும் கவலையளிக்கிறது.

தேவையில்லாத ஒன்று!
நீட் தேர்வு தமிழகத்துக்கு தேவையில்லாத ஒன்று. மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்கவோ, மருத்துவக் கல்வி வணிகமயமாவதைத் தடுக்கவோ நீட் தேர்வு எந்த வகையிலும் உதவவில்லை என்பது கடந்த 8 ஆண்டுக்கால புள்ளிவிவரங்களில் இருந்து உறுதியாகிறது. இதை உணர்ந்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வரும் போதிலும் அதை மத்திய அரசு செவிமடுக்கவில்லை.
தமிழகத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த நாளே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று வரை நீட் தேர்வை ரத்து செய்யவில்லை. மாணவ, மாணவிகளின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும். மாணவச் செல்வங்களைக் காக்க நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்கொலை செய்து கொண்ட மாணவி தர்ஷினியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
#NEETKills #SocialInjustice"
நீட் அச்சத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை: மாணவர்கொல்லி நீட் தேர்வுக்கு முடிவு கட்ட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) March 29, 2025
மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வில் போதிய மதிப்பெண்களை எடுக்க முடியாதோ? என்ற அச்சத்தில் சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் தர்ஷினி என்ற…
மாணவியின் தற்கொலை குறித்து பாஜக மற்றும் திமுகவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
"சென்னை ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அன்புமகள் தேவதர்ஷினி இருமுறை நீட் தேர்வு எழுதியும் தேர்வில் வெற்றிபெற முடியாமல், மூன்றாவது முறை தேர்வெழுதவிருந்த நிலையில், கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டுள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியும் மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது.
ஆட்சிகளை அகற்றாதவரை...
பாசிச பாஜக அரசு நீட் தேர்வை நீக்க மறுப்பது வர்ணாசிரமக் கொடுமையின் நவீன வடிவமேயாகும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ஒழிப்போம் என்ற பொய் வாக்குறுதியை அளித்து அதிகாரத்தில் அமர்ந்த திமுக அரசு இன்னும் எத்தனை மாணவ-மாணவியரின் உயிரை பலி கொடுக்கவுள்ளது?

நீட் தேர்வினால் மாணவ-மாணவியர் உயிரிழப்பது வெறும் தற்கொலை அல்ல; அவை இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசும் இணைந்து செய்யும் பச்சைப் படுகொலைகள். இந்த ஆட்சிகளை அகற்றாத வரை நீட் தேர்வை ஒழிக்கவும் முடியாது. நீட் தேர்வை ஒழிக்காதவரை இதுபோன்ற படுகொலைகளைத் தடுக்கவும் முடியாது".நீட்
சென்னை ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அன்புமகள் தேவதர்ஷினி இருமுறை நீட் தேர்வு எழுதியும் தேர்வில் வெற்றிபெற முடியாமல், மூன்றாவது முறை தேர்வெழுதவிருந்த நிலையில், கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டுள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியும் மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது.… pic.twitter.com/Pq7hms9WIt
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) March 29, 2025