செய்திகள் :

'இது கட்டமைக்கப்பட்ட சுரண்டல்!' ஏ.டி.எம்மில் பணம் எடுத்தால் ரூ.23 வரை கட்டணம்- RBI; ஸ்டாலின் கண்டனம்

post image

வரும் மே மாதம் முதல், ஒரு மாதத்தில் குறிப்பிட்ட அளவிற்கு மேல் ஏ.டி.எம்களில் எடுக்கப்படும் பணத்திற்கு ரூ.2-ல் இருந்து ரூ.23 வரை வங்கிகள் கட்டணம் விதிக்கலாம் என்று கடந்த வெள்ளிக்கிழமை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், "ஒன்றிய அரசு அனைவரையும் வங்கி கணக்கு தொடங்குமாறு அவசரப்படுத்தியது. அதன் பின்னர், பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டுவந்து டிஜிட்டல் இந்தியாவை முன்னுறுத்தியது.

அதற்கு பிறகு என்ன ஆனது? டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம், வங்கி கணக்கில் குறைந்த பணயிருப்பிற்கு அபராதங்களை கொண்டுவந்தது.

வைப்பு நிதி, காப்பீடு...ஏ.டி.எம் மூலம் எடுக்கலாம்...

இப்போது இந்திய ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட அளவிற்கு மேல் ஒரு மாதத்தில் பணம் எடுத்தால் ரூ.23 வரை வங்கிகள் கட்டணம் வசூலிக்கலாம் என்று கூறியுள்ளது.

இதனால், மக்கள் தங்களுக்கு தேவையான பணத்தை விட அதிகம் எடுப்பார்கள். குறிப்பாக, ஏழைகளின் நிதி உள்ளடக்கத்தின் நோக்கங்களை பாதிக்கும்.

ஏற்கனவே நிதியின்றி தவிக்கும் 100 நாள் வேலைத்திட்ட பயனாளிகளும், எங்கள் கலைஞர் மகளிர் உரிமை திட்டப் பணப் பரிமாற்றங்களால் பயனடையும் ஏழைகளும் தான் இதன் மூலம் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.

இது டிஜிட்டல் மயமாக்கல் அல்ல. இது கட்டமைக்கப்பட்ட சுரண்டல். ஏழைகளின் வாட்டம்; பணக்காரர்களின் புன்னகை" என்று பதிவிட்டிருக்கிறார்.

`வெறுப்பை உமிழ்வதற்கல்ல சினிமா' - மீண்டும் மீண்டும் முல்லைப் பெரியாறை சீண்டும் கேரள சினிமாக்காரர்கள்

தற்போது, திரையில் ஓடிக்கொண்டிருக்கும் மலையாள சினிமாவான ‘எம்புரான்’ படத்துக்கு, பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் என்று காவிகள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. 'கோத்ரா கலவரப் பின்னணியைக் காட்டியுள... மேலும் பார்க்க

'என் அப்பா பணத்தை தவறான வழியில்...' - ஆதவ் அர்ஜூனா மீது லாட்டரி மார்ட்டின் மகன் கடும் விமர்சனம்

பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜூனா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்தார். விசிக திமுக கூட்டணியில் இருந்தபோதும் ஆதவ் அர்ஜூனா திமுக மீது தொடர்ந்து பல்வேற... மேலும் பார்க்க

`ஓய்வு குறித்து விவாதிக்க ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் சென்றாரா பிரதமர் மோடி?’ - பரவும் தகவலின் பின்னணி

பிரதமராக நரேந்திர மோடி 2014-ம் ஆண்டு பதவியேற்ற பிறகு கடந்த 10 ஆண்டில் ஒரு முறை கூட ஆர்.எஸ்.எஸ்.தலைமை அலுவலகத்துக்கு சென்றது கிடையாது. தாய் இயக்கமான ஆர்.எஸ்.எஸ்.. பா.ஜ.கவின் வெற்றிக்காக தொடர்ந்து பாடுப... மேலும் பார்க்க

"ரூ.85,000 கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்திருக்கு..! " - கேள்வி எழுப்பும் அன்புமணி ராமதாஸ்

சீன கார் நிறுவனத்தின் ரூ.85,000 கோடி முதலீட்டை தமிழக அரசு இழந்துவிட்டதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இது குறித்து அன்புமணி ராமதாஸ், " சீனாவைச் சேர்ந்த மின்சார மகிழ... மேலும் பார்க்க

`நீட் ரகசியம் கேட்டால், உசேன் போல்டை விட வேகமாக ஓடுகிறார் உதயநிதி’ - ஆர்.பி.உதயகுமார் காட்டம்

மதுரை திருமங்கலம் ஒன்றியத்தில் நடந்த அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "தமிழக முழுவதும் 234 தொகுதிகளில் 68,500 வாக்குச்சாவடிகள் உள்ளது. இதில் பூத... மேலும் பார்க்க