4 மாதங்களுக்குப் பிறகு நீச்சல்குளத்தில் உற்சாக குளியல் போட்ட தெய்வானை யானை - பக்...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிறார்கள் மீட்பு; குழந்தை கடத்தல் கும்பல் கைது!
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒன்பது சிறார்களை மீட்டெடுத்த ரயில்வே இருப்புப் பாதை போலீசாருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மேலும் 3 பேர் கொண்ட தமிழகத்திலிருந்து குழந்தைகளைக் கடத்திச் செல்லும் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த தரகர்கள் மீது வழக்குப்பதிவு செய்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை மூன்று பேர் கொண்ட கும்பல் பிஹார் மாநிலத்தில் இருந்து வந்துள்ளது. இவர்கள் நடவடிக்கை, சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்ததால், இவர்களை ரயில்வே இருப்புப் பாதை போலீசார் விசாரணை நடத்தினர். சிறார்களை கொத்தடிமைகளாக வேலைக்குச் சேர்த்து விடும் மூவரைக் கைது செய்தனர்.