செய்திகள் :

முதல் ஓவரிலேயே ரன் அவுட்டான அபிஷேக் சர்மா..! 25/3 ரன்களுடன் சன்ரைசர்ஸ் தடுமாற்றம்!

post image

தில்லிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ரன் அவுட்டானார்.

இந்த ஐபிஎல் சீசனின் 10ஆவது போட்டியில் தில்லை எதிர்த்து தனது போட்டியில் சன்ரைசர்ஸ் தனது சொந்த மண்ணில் விளையாடுகிறது.

டாஸ் வென்ற கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். முதல் ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீசினார்.

இதில் முதல் பந்தில் அபிஷேக் ஒரு ரன் எடுக்க அடுத்த 2 பந்துகளில் டிராவிஸ் ஹெட் 2 பவுண்டரிகள் அடிப்பார்.

4ஆவது பந்தில் 2 ரன்கள் எடுக்க 5ஆவது பந்தில் டிராவிஸ் ஹெட் சிங்கிள் எடுக்க ஓடும்போது அபிஷேக் சற்று தாமதமாக ஓடியதால் தில்லி அணி வீரர் விப்ராஜ் நிகாம் பந்தினைப் பிடித்து ஸ்டம்பில் அடித்தார்.

அதிரடி வீரர் அபிஷேக் சர்மா 1 ரன்னில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

2.3 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 25/3 ரன்கள் எடுத்துள்ளது.

மிட்செல் ஸ்டார்க் ஓவரில் இஷான் கிஷன், நிதீஷ் குமார் ரெட்டி ஆட்டமிழந்தார்.

மதிய உணவு உண்ணாமல் விளையாடிய அஸ்வனி குமார்..! பாண்டியாவின் அறிவுரையால் கிடைத்த விக்கெட்!

அறிமுகப் போட்டி என்பதால் மதிய உணவு உண்ணாமலே விளையாடியதாக ஆட்ட நாயகன் விருது வென்ற இளம் மும்பை வீரர் அஸ்வனி குமார் பேசியுள்ளார்.ஐபிஎல் 18ஆவது சீசனின் 12ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நிர்ணயி... மேலும் பார்க்க

மும்பை அணியில் இளம் வீரர்கள் தேர்வு குறித்து பேசிய ஹார்திக் பாண்டியா!

ஐபிஎல் 18ஆவது சீசனின் 12ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட 117 என்ற இலக்கினை 12.5 ஓவர்களில் வென்று அசத்தியது. இந்தப் போட்டியில் மும்பை சார்பாக அறிமுகமான அஸ்வினி குமார் 4 விக்கெ... மேலும் பார்க்க

அஸ்வனி, ரயான் அபாரம்; மும்பைக்கு முதல் வெற்றி

ஐபிஎல் போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடா்ஸை திங்கள்கிழமை வெற்றி கண்டது. முதலில் கொல்கத்தா 16.2 ஓவா்களில் 116 ரன்களுக்... மேலும் பார்க்க

அறிமுகப் போட்டியில் அசத்திய இளம் வீரர்; 116 ரன்களுக்கு ஆட்டமிழந்த கேகேஆர்!

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் மும்பை இந்திய... மேலும் பார்க்க

அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?

அறிமுகப் போட்டியின் முதல் பந்திலேயே ரஹானே உள்பட 3 விக்கெட்டைத் தூக்கிய மும்பை வீரர் அஸ்வனி குமார், அணியில் நிரந்தரமாக ஜொலிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.18-வது ஐபிஎல் தொடரின் லீக் சுற்றின் 12... மேலும் பார்க்க

மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு: கொல்கத்தா அணியில் சுனில் நரைன்!

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று மும்பை அணி முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்துள்ளது.18-வது ஐபிஎல் தொடரின் லீக் சுற்றின் 12 வது போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் ப... மேலும் பார்க்க