எதிரணிக்கு சாதகம்: பிட்ச் மேற்பார்வையாளரை குற்றம் சுமத்தும் லக்னௌ ஆலோசகர்!
மதிய உணவு உண்ணாமல் விளையாடிய அஸ்வனி குமார்..! பாண்டியாவின் அறிவுரையால் கிடைத்த விக்கெட்!
அறிமுகப் போட்டி என்பதால் மதிய உணவு உண்ணாமலே விளையாடியதாக ஆட்ட நாயகன் விருது வென்ற இளம் மும்பை வீரர் அஸ்வனி குமார் பேசியுள்ளார்.
ஐபிஎல் 18ஆவது சீசனின் 12ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட 117 என்ற இலக்கினை 12.5 ஓவர்களில் வென்று அசத்தியது.
இந்தப் போட்டியில் ரூ.30 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட மும்பை சார்பாக அறிமுகமான அஸ்வனி குமார் 3 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
ஆட்ட நாயகன் விருது வென்ற அஸ்வனி குமார் பேசியதாவது:
மதிய உணவு சாப்பிடமால் விளையாடியது ஏன்?
எனக்கு நன்றாக இருப்பதாக உணர்கிறேன். போட்டிக்கு முன்பாக சிறிதி அழுத்தம் இருந்தது. ஆனால், எங்களது மும்பை அணிக்கு நன்றி கூறியாக வேண்டும். ஏனெனில் அவர்கள் எனக்கு எந்தவித அழுத்தத்தையும் தரவில்லை.
முதலில் அழுத்தம் இருந்ததால் நான் மதிய உணவு எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை. வாழைப்பழம் மட்டுமே எடுத்துக்கொண்டேன்.
ஆனால், பிறகு எனக்கு பசிக்கு எடுக்கவில்லை. நன்றாக விளையாடியதால் எனக்கு மகிழ்ச்சி.
கேப்டனின் அறிவுரை
எங்களுக்கென்று ஒரு திட்டம் இருந்தது. ஆனால், கேப்டன் ஹார்திக் பாண்டியா என்னிடம் ’உன்னுடைய முதல்போட்டி என்பதால் நீ விரும்பும்படி பந்துவீசு, போட்டியை மகிழ்ச்சியுடன் விளையாடு’ என்றார். எனக்கு அது உதவியது.

ஆண்ட்ரே ரஸல் எனது முதல் பந்தில் பவுண்டரி அடித்ததும் கேப்டன் ஹார்திக் பாண்டியா என்னிடம் ரஸல் உன் ஓவரில் அடிக்க முயற்சிக்கிறார். அதனால், அவருக்கு உடலுக்கு நேராக பந்துவீசு என அறிவுரைக் கூறினார்.
அதேமாதிரி என்னை அடிக்க நினைத்து ரஸல் ஆட்டமிழந்தார் என அஸ்வனி குமார் நெகிழ்ச்சியுடன் கூறினார்.