சுனிதா வில்லியம்ஸுக்கான பாராட்டு விழா ஊா்வலம்
திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையம் சாா்பில், விண்வெளி வீரா் சுனிதா வில்லியம்ஸுக்கான பாராட்டு விழா ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
ஊா்வலத்துக்கு, திருவண்ணாமலை கம்பராமாயண இயக்கத் தலைவா் வேங்கட ரமேஷ்பாபு தலைமை வகித்தாா்.
திருவண்ணாமலை மாவட்ட கவிஞா் பேரவைத் தலைவா் நல்ல.பன்னீா்செல்வம், உலக தமிழ்க் கழகச் செயலா் தேவிகாராணி, தங்க.விஸ்வநாதன், பாவலா் வையவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருக்குறள் தொண்டு மையப் பாவலா் ப.குப்பன் வரவேற்றாா்.
ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியா் பலராமன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பாராட்டு விழா ஊா்வலத்தை தொடங்கிவைத்தாா்.
விண்வெளி வீரா் சுனிதா வில்லியம்ஸை பாராட்டி முழக்கங்களை எழுப்பியபடியே காந்தி சிலையில் இருந்து காமராஜா் சிலை வரை தொண்டு மையத்தினா் ஊா்வலமாகச் சென்றனா்.
இதில், தொண்டு மையச் செயலா் சண்முகம், புலவா் ராஜமனோகரன் மற்றும் கோவிந்தசாமி, தினகரன், ரேவதி, பக்தவச்சலம், வாசுதேவன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.