செய்திகள் :

வெறுப்புணர்வு பற்றி யோகி எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

post image

வெறுப்புணர்வு பற்றி உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த சிறப்பு நேர்க்காணலில், நாட்டில் நிலவும் அரசியல் பிரச்னைகள் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார்.

அப்போது ஹிந்தி எதிர்ப்பு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த யோகி ஆதித்யநாத், “வாக்கு வங்கி குறைந்துவிட்டதாக உணர்ந்ததால், முதல்வர் ஸ்டாலின் மொழி அடிப்படையிலான பிளவுகளை உருவாக்க முயற்சிக்கிறார். மொழி அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்தக் கூடாது. காசி - தமிழ் சங்கமத்தை பிரதமர் மோடி நடத்தி வருகிறார். சமஸ்கிருதத்தைப் போல தமிழின் வரலாறும் பழமையானது. இந்திய பாரம்பரியத்தின் கூறுகள் தமிழில் இருப்பதால், ஒவ்வொரு இந்தியருக்கும் தமிழ் மீது மரியாதை உண்டு. பிறகு ஏன் ஹிந்தியை வெறுக்க வேண்டும். மொழி ஒன்றிணைக்க மட்டுமே வேலை செய்யும், பிரிவினைக்கு அல்ல” எனத் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருப்பதாவது:

“இருமொழிக் கொள்கை மற்றும் நியாயமான தொகுதி மறுசீரமைப்பு குறித்த தமிழ்நாட்டின் உறுதியான குரல் நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. பாஜக தலைவர்கள் அதிர்ச்சியடைந்திருப்பது அவர்களின் நேர்க்காணல்களில் தெரிகிறது.

வெறுப்புணர்வு குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்கத் தேவையில்லை. அவருடைய கருத்து முரண்பாடல்ல, அரசியலின் பிளாக் காமெடி.

நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை, திணிப்பு மற்றும் ஆதிக்கத்தை மட்டுமே எதிர்க்கிறோம். நாங்கள் செய்வது வாக்கு வங்கிக்கான கலவர அரசியல் அல்ல, கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : முஸ்லிம்களுக்கு பாதுகாப்பானது உத்தரப் பிரதேசம்: யோகி ஆதித்யநாத்

ஏப்.2இல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ஏப்ரல் 2, 3 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வ... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி உகாதி வாழ்த்து

உகாதி திருநாளையொட்டி தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், 'உகாதி' என்னும் புத்தா... மேலும் பார்க்க

ஈரோடு: ஆசிட் டேங்கர் லாரி சுத்தம் செய்யும் பணியின்போது மூச்சுத்திணறி இருவர் உயிரிழப்பு!

பவானி: சித்தோடு அருகே ஆசிட் டேங்கர் லாரியை சுத்தம் செய்தபோது இருவர் உயிரிழந்தனர்.ஈரோடு மாவட்டம், சித்தோட்டை அடுத்த கோணவாய்க்கால், ராமன் பாலக்காட்டைைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் யுவானந்த வேல்(45). இ... மேலும் பார்க்க

அம்பாசமுத்திரம் அருகே 10 நாளாக வனத்துறைக்கு போக்கு காட்டிய கரடி பிடிபட்டது!

அம்பாசமுத்திரம் அருகே கடந்த 10 நாள்களாக வனத்துறைக்கு போக்கு காட்டி வந்த கரடி கூண்டில் சிக்கியது. திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொன்மா நகர், நெசவாளர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் கடந... மேலும் பார்க்க

இஸ்லாமிய மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரமலான் வாழ்த்து

இரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், அறம் பிறழா மனித வாழ்வை வலியுறுத்தும் இரமலான் திரு... மேலும் பார்க்க

ஏடிஎம் கட்டண உயர்வுக்கு முதல்வர் கண்டனம்!

ஏடிஎம் மையங்களில் பரிவர்த்தனை சேவைகள் மீதான கூடுதல் கட்டணத்தை மத்திய ரிசர்வ் வங்கி உயர்த்தியதற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.முதல்வர் ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவி... மேலும் பார்க்க