மீண்டும் மீண்டுமா? ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம்!
மும்பை இந்தியனஸ் அணி கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணி நேற்று இரவு (மார்ச்.29) அஹமதாபாத்தில் மோதியது.
இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 196 ரன்கள் அடிக்க அடுத்து விளையாடிய மும்பை 160/6 ரன்கள் மட்டுமே எடுத்தது.
36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற மும்பை அணிக்கு மேலும் ஒரு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் பாண்டியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகளின்படி அபராதம்
இந்தப் போட்டியில் குறிப்பிட்ட நேரத்தைவிட மெதுவாக பந்துவீசியதற்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சீசனிலும் இதுபோல் பலமுறை அபராதம் விதிக்கப்பட்டன. அதனால், இந்த சீசனில் முதல் போட்டியில் ஹார்திக் விளையாடாதது குறிப்பிடத்தக்கது.
கடந்த சீசனில் கேப்டனை அணியிலிருந்து நீக்கும் விதிமுறை இருந்தது. தற்போது, அபராதத்துடன் கேப்டனுக்கு ஒரு தகுதி புள்ளி குறைப்பு (டீ மெரிட் பாயிண்ட்) வழங்கப்பட்டது.
2 போட்டிகளிலும் தோல்வியுற்று மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 9ஆவது இடத்தில் இருக்கிறது.