செய்திகள் :

Mohanlal: "நான் என் நண்பர் மம்மூட்டிக்காக பூஜை செய்தேன்; இதில் என்ன தவறு?" - மனம் திறந்த மோகன்லால்

post image

மலையாள சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர்கள் மோகன் லால், மம்மூட்டி.

சமீபத்தில் மம்மூட்டிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்தன. பிறகு மம்மூட்டி தரப்பில் அவர் நலமுடன் இருப்பதாக விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் 'எம்புரான்' படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாகியிருக்கும் மோகன்லால், சமீபத்தில் சபரிமலைக்குச் சென்றிருந்தார். அப்போது மம்மூட்டியின் ஆரோக்கியத்திற்காக வேண்டி பூஜை செய்திருந்தார். இந்தத் தகவல் நட்பின் எடுத்துக்காட்டாக வைரலாகியிருந்தது. இருவரின் நட்பையும் அவர்களது ரசிகர்கள் நெகிழ்ந்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

சபரிமலையில் மோகன் லால்

இதற்கிடையில் மலையாள பத்திரிக்கையாளரான அப்துல்லா என்பவர், "இஸ்லாமியராக இருக்கும் மம்மூட்டி அல்லாஹ்விடம் மட்டும்தான் பிரார்த்தனை செய்ய வேண்டும். மம்மூட்டிக்கு தெரிந்தே இது நடந்திருந்தால், இதற்காக மம்மூட்டி மன்னிபுக் கேட்க வேண்டும்" என கருத்து பதிவிட்டு இருந்தது சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.

இந்நிலையில் 'எம்புரான்' படத்தின் புரோமோஷனுக்காக பல்வேறு இடங்களுக்கு பறந்து கொண்டிருக்கும் மோகன் லாலிடம், மம்மூட்டிக்காக பூஜை செய்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மோகன் லால், "நண்பர் மும்மூட்டிக்கு கொஞ்சம் உடல்நலம் சரியில்லாமல் இருந்தது.

மோகன் லால், மம்மூட்டி

அதற்காக சபரிமலையில் பூஜை செய்தேன். ஆனால், அதை தேவஸ்தானம் போர்டில் இருப்பவர்கள் வெளியில் சொல்லி எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். அவருக்காக நான் பிரார்த்தனை செய்வது என்னுடய தனிப்பட்ட விஷயம். அது எங்கள் இருவருக்குமான நட்பு. இதில் என்ன தவறு இருக்கிறது" என்று பதிலளித்திருக்கிறார்.

மேலும், "மம்மூட்டிக்கு கவலைப்படும்படியாக ஏதுமில்லை, அவர் இப்போது நலமுடன் இருக்கிறார்" என்று கூறியிருக்கிறார்.

Empuraan: `மலையாள சினிமாவின் புதிய உச்சம்' - எம்புரான் படத்துக்கு ஆதரவு தெரிவித்த பினாராயி விஜயன்

மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள எம்புரான் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் 2002 குஜராத் ... மேலும் பார்க்க

Empuraan: "மோகன்லால் மீது தவறு இல்லை" - பிரித்விராஜை விமர்சித்த மேஜர் ரவி!

மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில், வெளியாகி வெற்றிகரமாக ஓடிவரும் திரைப்படம் எம்புரான். பிரித்விராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வகுப்புவாத வன்முறை சார்ந்த காட்சிகள், 2002 குஜராத் கலவரத்தை ... மேலும் பார்க்க

Empuraan: `மனம் வருந்துகிறோம்' - எம்புரான் பட சர்ச்சை தொடர்பாக மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன்லால்!

மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கி வெளியாகியுள்ள திரைப்படம் எம்புரான். வெற்றிகரமாக வசூலைக் குவித்துவரும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள கலவரம் சார்ந்த காட்சிகள் 2002 குஜராத் கலவரத்தை நினைவுபடு... மேலும் பார்க்க

Empuraan: எம்புரான் படத்தில் இடம்பெற்ற அரசியல் விமர்சனங்கள்... சமூக வலைதளங்களை சூடாக்கும் பதிவுகள்!

மோகன்லால் கதாநாயகனாக நடித்துள்ள எம்புரான் சினிமா கடந்த 27-ம் தேதி ரிலீஸ் ஆனது. லூசிபர் சினிமாவின் இரண்டாம் பாகமான எம்புரான் சினிமா, ரிலீசுக்கு முன்பே சுமார் 50 கோடி ரூபாய்க்கு டிக்கெட் முன்பதிவு நடந்த... மேலும் பார்க்க

L2: Empuraan Review: தெளிவான அரசியல், அடிப்பொலி மோகன்லால்; ஆனாலும் சோதிக்கும் சேட்டன் சினிமா!

கேரள முதல்வர் பி.கே.ராமதாஸின் (சச்சின் கெடெக்கர்) மறைவிற்குப் பிறகு, கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றி, மாநிலத்தில் போதைப் புழக்கத்தை அதிகரிக்க முயல்கிறார் அவரின் மருமகன் பாபி (விவேக் ஓபராய்). அவரைக் ... மேலும் பார்க்க

L2 Empuraan: ஸ்டீபனும் நான்தான் அப்ரகாம் குரேஷியும் நான் தான் - Lucifer படத்தின் ரீ விசிட்

ப்ரித்விராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கிற ̀எல்: எம்புரான்' திரையரங்குகளில் இன்று வெளியாகியிருக்கிறது. பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக இந்த மாலிவுட் திரைப்படம் உருவாகியிருக்கிறது. இத்திரைப்படம் மாலிவு... மேலும் பார்க்க