செய்திகள் :

Empuraan: எம்புரான் படத்தில் இடம்பெற்ற அரசியல் விமர்சனங்கள்... சமூக வலைதளங்களை சூடாக்கும் பதிவுகள்!

post image

மோகன்லால் கதாநாயகனாக நடித்துள்ள எம்புரான் சினிமா கடந்த 27-ம் தேதி ரிலீஸ் ஆனது. லூசிபர் சினிமாவின் இரண்டாம் பாகமான எம்புரான் சினிமா, ரிலீசுக்கு முன்பே சுமார் 50 கோடி ரூபாய்க்கு டிக்கெட் முன்பதிவு நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் எம்புரான் சினிமாவில் பா.ஜ.க, காங்கிரஸ், சி.பி.எம் கட்சிகளை விமர்சிக்கும் வகையில் இடம்பெற்றுள்ள காட்சிகள் குறித்து சமூக வலைதளங்களில் சூடான பதிவுகள் வலம்வருகின்றன. குஜராத் கலவரம் காரணமாக சங்பரிவார் ஆட்சி அதிகாரத்தை பிடித்ததாக பா.ஜ.க-வுக்கு எதிரான கருத்துக்கள் எம்புரான் சினிமாவில் உள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பினீஸ் கொடியேரி முகநூல் பக்கத்தில் கருத்து பகிர்ந்திருந்தார். இதையடுத்து சங்பரிவார் ஆதரவாளர்கள் எம்புரான் சினிமாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சிலர் எம்புரான் சினிமா பார்ப்பதற்காக முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்துசெய்து அதன் ஸ்கிரீன்ஷாட்டுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்துவருகின்றனர். பா.ஜ.க-வைச் சேர்ந்த லஸிதா பாலக்கல் உள்ளிட்டவர்கள் எம்புரான் சினிமாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

பா.ஜ.க மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர் பதிவிட்ட போட்டோ

மோகன்லாலின் கர்னல் பதவியை (கவுரவ ராணுவ பதவி) திரும்பப்பெற ஜனாதிபதிக்கு மனு அளிக்க வேண்டும் என்றும்... பிரித்விராஜ் வீட்டில் இ.டி ரெய்டு நடத்த வேண்டும் எனவும் சங்பரிவார் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். தங்கள் சமூக வலைதள பக்கத்தில் மட்டும் அல்லாது நடிகர்கள் மோகன்லால், பிரித்விராஜ் ஆகியோரது பதிவுகளிலும் பின்னூட்டமாக தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்துவருகின்றனர். அதே சமயம் மோகன்லாலுக்கும், பிரித்விராஜிக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ள கேரள மாநில பா.ஜ.க தலைவர் ராஜீவ் சந்திரசேகர், வரும் நாட்களில் எம்புரான் சினிமா பார்க்க உள்ளதாக பதிவிட்டுள்ளார்.

எம்புரான்

மேலும், காங்கிரஸ் கட்சியில் வாரிசு அரசியல் உள்ளதை கிண்டல் செய்யும் விதமாகவும் காட்சி அமைப்புகள் உள்ளதாக காங்கிரஸ் ஆதரவாளர்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும், கம்யூனிஸ்ட் கட்சியை கிண்டலடிக்கும் வகையிலும் சில காட்சிகள் எம்புரானில் உள்ளதாக சைபர் அட்டாக் நடத்தப்பட்டுவருகிறது. கேரளாவின் முக்கியமான மூன்று கட்சிகளையும் எம்புரான் அட்டாக் செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

Empuraan: எம்புரானுக்கு எழுந்த சர்ச்சை; 17 கட்களை மேற்கொள்ள படக்குழு திட்டம்

ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் ஆகியோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது ̀எல் 2: எம்புரான்'. இத்திரைப்படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ̀லூசிஃபர்' படத்தின் ... மேலும் பார்க்க

L2 Empuraan: தவறாகச் சித்தரிக்கும் காட்சிகள்; நீக்கக்கோரி விவசாய சங்கம் போராட்டம் அறிவிப்பு

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் எம்புரான் திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்தப்படம் 2019-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற லூசிஃபர் படத்தின் 2 ஆம் பாகம். இந்தத் திரைப்படத்தில் 2002 ... மேலும் பார்க்க

L2 Empuraan: ''லூசிஃபர் படத்தைப் பற்றி சிரஞ்சீவி சார்கூட நடந்த உரையாடல்'' - ப்ரித்விராஜ் ஷேரிங்ஸ்

தனது கச்சிதமான நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் நீங்கமற இடம் பிடித்திருப்பவர் நடிகர் பிரித்விராஜ். மலையாள திரையுலகில் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் தனது சிறந்த நடிப்பால் ரசிகர்க... மேலும் பார்க்க

Empuraan: `மலையாள சினிமாவின் புதிய உச்சம்' - எம்புரான் படத்துக்கு ஆதரவு தெரிவித்த பினாராயி விஜயன்

மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள எம்புரான் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் 2002 குஜராத் ... மேலும் பார்க்க

Empuraan: "மோகன்லால் மீது தவறு இல்லை" - பிரித்விராஜை விமர்சித்த மேஜர் ரவி!

மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில், வெளியாகி வெற்றிகரமாக ஓடிவரும் திரைப்படம் எம்புரான். பிரித்விராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வகுப்புவாத வன்முறை சார்ந்த காட்சிகள், 2002 குஜராத் கலவரத்தை ... மேலும் பார்க்க

Empuraan: `மனம் வருந்துகிறோம்' - எம்புரான் பட சர்ச்சை தொடர்பாக மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன்லால்!

மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கி வெளியாகியுள்ள திரைப்படம் எம்புரான். வெற்றிகரமாக வசூலைக் குவித்துவரும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள கலவரம் சார்ந்த காட்சிகள் 2002 குஜராத் கலவரத்தை நினைவுபடு... மேலும் பார்க்க