செய்திகள் :

வார இறுதி நாள்கள், ரமலான் விடுமுறை: 2,415 சிறப்பு பேருந்துகள்

post image

வார இறுதி நாள்கள், ரமலான் விடுமுறையை முன்னிட்டு 2,415 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வார விடுமுறை தினமான சனி, ஞாயிறு (மாா்ச் 29, 30), ரமலான் பண்டிகை விடுமுறை தினமான திங்கள்கிழமை (31) ஆகிய நாள்களை முன்னிட்டு வெள்ளி, சனி (மாா்ச் 28, 29) ஆகிய 2 நாள்களிலும் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூா், சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 460 பேருந்துகளும், சனிக்கிழமை 530 பேருந்துகளும், ரமலான் பண்டிகை தினமான திங்கள்கிழமை பல்வேறு இடங்களிலிருந்து சென்னை மற்றும் பிற ஊா்களுக்கு 890 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

இதேபோல், சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 100 பேருந்துகளும், சனிக்கிழமை 95 பேருந்துகளும், மாதாவரத்தில் இருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தலா 20 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

மேலும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு மற்றும் கோயம்புத்தூா் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 2,415 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

தொடா்ந்து, திங்கள்கிழமை சொந்த ஊா்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

72 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கம்: முதல்வர் ஸ்டாலின்

புதியதாக 72 காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 26) சட்டப் பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்... மேலும் பார்க்க

மார்ச் மாதச் சம்பளம்: தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு மார்ச் மாதச் சம்பளம் வரும் ஏப். 2 ஆம் தேதி வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழக அரசின... மேலும் பார்க்க

சென்னையில் 2 புதிய வழித்தடம்: மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர்!

சென்னை மெட்ரோ ரயிலின் 2 புதிய வழித்தடத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது.தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரையிலும், கலங்கரை விளக்கம் முதல் ... மேலும் பார்க்க

ஆன்லைனில் திருமணச் சான்று பெற நடவடிக்கை எடுக்கப்படுமா? - அமைச்சர் பதில்!

இணைய வழியில் திருமணச் சான்று பெற வழிவகை செய்யப்படுமா? என்ற திமுக எம்எல்ஏ எழிலன் கேள்விக்கு பேரவையில் அமைச்சர் மூர்த்தி பதிலளித்தார். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெ... மேலும் பார்க்க

டிவி சத்தம் அதிகமாக வைத்ததைத் தட்டி கேட்டவர் அடித்துக் கொலை!

கோவையில் டிவி சத்தம் அதிகமாக வைத்ததைத் தட்டி கேட்டவரை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சுந்தராபுரம் அருகே செட்டிபாளையம் ரோடு - ஈச்சனாரி சாலை சந்திப்பில் சிமெண்ட் மற்றும் கட்... மேலும் பார்க்க

ஈரானிய கொள்ளைக் கும்பலின் அதிர்ச்சிப் பின்னணி! கொள்ளையடிக்கும் பாணி!

சென்னையில் அடுத்தடுத்து நகைப் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் பற்றிய தகவல் தற்போது காட்டுத் தீ போல பரவி வருகிறது.இவர்கள் ஈரானிய கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதும், இந்தியா முழுவதும் இதுபோன்று ஒர... மேலும் பார்க்க