கிராமசபை கூட்டம்னு சொல்லிட்டு ஏன் திமுக ஆர்ப்பாட்டமாக மாத்துறீங்க? சரமாரி கேள்வி...
சென்னையில் 2 புதிய வழித்தடம்: மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர்!
சென்னை மெட்ரோ ரயிலின் 2 புதிய வழித்தடத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது.
தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரையிலும், கலங்கரை விளக்கம் முதல் உயர்நீதிமன்றம் வரையிலும் மெட்ரோ ரயில் பாதைகளை நீட்டிப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரையிலான 21 கி.மீ. தொலைவுக்கு புதிய வழித்தடமும் கலங்கரை விளக்கம் முதல் உயர்நீதிமன்றம் வரையிலான 6 கி.மீ. தொலைவுக்கு புதிய வழித்தடத்தை விரிவாக்கம் செய்யவும் திட்ட அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது.
தற்போது, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பச்சை, நீல வழித்தடங்களில் ரயில் சேவைகளை வழங்கி வருகிறது. இது மக்களின் போக்குவரத்து நெரிசல் இல்லா பயணத்துக்கு வழிவகுத்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து, சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் 116 கிலோ மீட்டருக்கு 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தமிழக அரசிடம் முன்னதாக சமா்ப்பித்தது.
அதேபோல், கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ சேவையை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையும் தமிழக அரசிடம் சமர்பிக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.