செய்திகள் :

`இந்துக்கள் பாதுகாப்பாக இருந்தால், முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு’ - யோகி ஆதித்யநாத் பேச்சு

post image

இந்தியா மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவரும், ஹைதராபாத் மக்களவைத் தொகுதியின் எம்.பியுமான அசாதுதீன் ஒவைசி, சமீபத்தில் 'பா.ஜ.க'வின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து, "முஸ்லிம்கள் ஆபத்தில் உள்ளனர்" என்று பேசியிருந்தார்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இதற்குப் பதிலளிக்கும் வகையில் சமீபத்திய பாட்காஸ்ட் ஒன்றில், "இந்துக்களும், இந்து பாரம்பரியமும் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் தாங்களும் பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை உணர வேண்டும்." என்று பேசியிருக்கிறார்.

ஒவைசி

இதுகுறித்துப் பேசியிருக்கும் யோகி ஆதித்யநாத், "முஸ்லிம்கள் யாரும் ஆபத்தில் இல்லை. அவர்களின் (அசாதுதீன் ஒவைசி) வாக்கு வங்கிதான் ஆபத்தில் உள்ளது. இந்திய முஸ்லிம்கள் தங்களின் மூதாதையர்களைப் புரிந்து கொள்ளும் நாளில், இதுபோன்றவர்கள் தங்களின் மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறே வேண்டியது தான்.

கடந்த 1947ம் ஆண்டுக்கு முன்பு பாகிஸ்தான் மற்றும் வங்கதேசமும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது. உண்மையை நாம் எப்படி மறக்க முடியும்? பாகிஸ்தானில் ஹிங்லாஜ் மாதா கோவில் இல்லையா? வங்கதேசத்தில் தகேஷ்வரி மாதா கோயில் இல்லை?

யோகி ஆதித்யநாத்

நூறு இந்து குடும்பங்களுக்கு மத்தியில் ஒரு முஸ்லிம் குடும்பம் பாதுகாப்பாக இருக்க முடியும். அனைத்து மத பழக்க வழக்கங்களையும் சுதந்திரமாக பின்பற்ற முடியும். ஆனால், நூறு முஸ்லிம் குடும்பங்களுக்கு மத்தியில் 50 இந்து குடும்பங்கள் பாதுகாப்பாக இருக்க முடியுமா, இல்லை. வங்கசேதம் அதற்கு உதாரணம், முன்பு பாகிஸ்தான் அதற்கு உதாரணம். ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது.

நாம் தாக்கப்படுவதற்கு முன்பு பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதைத்தான் கவனத்தில் கொள்ளவேண்டும். உத்தரப் பிரதேசத்தில் 2017-க்கு முன்பு கலவரம் நடந்திருந்தால், அதில் இந்து கடைகள் எரிந்தால் முஸ்லிம் கடைகளும் எரிந்திருக்கும், இந்து வீடுகள் எரிந்தால் முஸ்லிம் வீடுகளும் எரிக்கப்பட்டிருக்கும்.

யோகி ஆதித்யநாத்

2017-ல் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு கலவரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நான் ஒரு சாதாரண உத்தரப் பிரதேச குடிமகன். நானொரு யோகி, அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்பும் யோகி." என்று பேசியிருக்கிறார்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

`பாரதியார் இல்லத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வர வேண்டாம்’ - ஆட்சியர் அறிவிப்பு; காரணம் என்ன?

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வரலாற்று பக்கத்தில் மிக நீண்ட பாரம்பரியத்தை கொண்டது. ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் மிகப்பெரிய பாளையமாகவும் எட்டப்ப நாயக்கர்களால் ஆட்சி செய்யப்பட்ட பகுதியாகவு... மேலும் பார்க்க

RTI: உள்ளே நுழையும் DPDP act பிரிவு 44 (3); பறிபோகும் ஆர்.டி. ஐ உரிமை... பிரச்னை என்ன? | Explainer

`மத்திய பட்ஜெட் - 2025' மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு, வக்பு வாரிய விவகாரம் போன்ற விஷயங்களில் மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் பல கேள்விகளை எழுப்பி வர... மேலும் பார்க்க

"அன்று இபிஎஸ் சொன்ன வார்த்தை; அவராகவே பதவி விலகுவதுதான் மரியாதை" - ஓ.பி.எஸ் பதிலடி

தூத்துக்குடியில் இன்று (மார்ச் 27) செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, " 'அ.தி.மு.க'வில் ஓ.பன்னீர் செல்வத்தை இணைக்க வாய்ப்பில்லை. பிரிஞ்சது, பிரிஞ்சதுதான். இனி அவரை சேர்ப்பதற்கு வாய்ப்பேயில்ல... மேலும் பார்க்க

மீனவர்கள் 11 பேர் கைது; இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் தொடரும் சிறைபிடிப்பு!

பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதியான மன்னார் வளைகுடா கடல் பரப்பில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து சிறை பிடித்து வருகிறது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பது பல ஆண... மேலும் பார்க்க

Ilaiyaraaja: `இளையராஜாவுக்கு பாராட்டு விழா' - தேதியை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்

லண்டனில் கடந்த மாதம் மார்ச் 8-ம் தேதி 'சிம்பொனி 01 'Valiant'' சிம்பொனியை இசையமைப்பாளர் இளையராஜா அரங்கேற்றம் செய்திருந்தார்.லண்டனுக்குச் செல்லும் முன், இந்தியாவிலிருந்து தமிழர் ஒருவர் பண்ணைப்புரம் கிரா... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணி; மீண்டும் ஓபிஎஸ்..? - எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன?

2021 சட்டமன்றத் தேர்தலில் 'பா.ஜ.க'வுடன் கூட்டணி வைத்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க, பல சிக்கல்களால் பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாதுஎன்று சமீபமாக கூறிவந்தது. இருப்பினும் 2026 சட்டமன்றத் தேர்தல்... மேலும் பார்க்க