செய்திகள் :

அதிமுக - பாஜக கூட்டணி; மீண்டும் ஓபிஎஸ்..? - எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன?

post image

2021 சட்டமன்றத் தேர்தலில் 'பா.ஜ.க'வுடன் கூட்டணி வைத்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க, பல சிக்கல்களால் பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாது என்று சமீபமாக கூறிவந்தது. இருப்பினும் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணி குறித்த பேச்சுகள் தமிழ்நாடு அரசியலில் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றன.

அதற்கேற்ப நேற்று (மார்ச் 25) எடப்பாடி பழனிசாமி மற்றும்  முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் டெல்லிக்குச் சென்றிருந்தனர்.

ஒ.பன்னீர் செல்வம்

டெல்லியில் இருக்கும் அ.தி.மு.க அலுவலகத்தைப் பார்வையிட்ட அவர்கள், அதன் பிறகு  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்துக்கே நேரில் சென்று சந்திருந்தனர். இது 'பா.ஜ.க - அ.தி.மு.க' கூட்டணி பேச்சுகள் அரசியலில் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.

இதுகுறித்து இன்று (மார்ச் 27) தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, "'அ.தி.மு.க'வில் ஓ.பன்னீர் செல்வத்தை இணைக்க வாய்ப்பில்லை. பிரிஞ்சது, பிரிஞ்சதுதான். இனி அவரை சேர்ப்பதற்கு வாய்ப்பேயில்லை. இந்தக் கட்சியை எதிரிகளிடம் அடமானம் வைப்பதை எங்களால் தாங்க முடியவில்லை.

அவர் என்றைக்கு நாங்கள் கோவிலாக மதிக்கக்கூடிய 'அ.தி.மு.க' தலைமை கட்சி அலுவலகத்தில் ரவுடிகளைக் கூட்டிச் சென்று கூட்டம் நடத்தி, அதன் மீது தாக்குதல் நடத்தினாரோ அன்றைக்கு அவருக்கு 'அ.தி.மு.க'வில் இருப்பதற்குத் தகுதியில்லாமல் போனது. அந்த அடிப்படையில் அவரை இனி இணைக்க வாய்ப்பேயில்லை.

அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி
அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 11 மாத காலமிருக்கு, அதுக்குள்ள எப்படி கூட்டணி பற்றி பேசுவது. மக்கள் கோரிக்களை நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில்தான் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தேன். கூட்டணி பற்றி நாங்கள் ஏதும் பேசவில்லை.

மற்றக் கட்சிகளைப் பொறுத்தவரை தேர்தல் நெருங்கும் சமயத்தில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும். ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி வைப்போம்" என்று பேசியிருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`பாரதியார் இல்லத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வர வேண்டாம்’ - ஆட்சியர் அறிவிப்பு; காரணம் என்ன?

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வரலாற்று பக்கத்தில் மிக நீண்ட பாரம்பரியத்தை கொண்டது. ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் மிகப்பெரிய பாளையமாகவும் எட்டப்ப நாயக்கர்களால் ஆட்சி செய்யப்பட்ட பகுதியாகவு... மேலும் பார்க்க

RTI: உள்ளே நுழையும் DPDP act பிரிவு 44 (3); பறிபோகும் ஆர்.டி. ஐ உரிமை... பிரச்னை என்ன? | Explainer

`மத்திய பட்ஜெட் - 2025' மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு, வக்பு வாரிய விவகாரம் போன்ற விஷயங்களில் மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் பல கேள்விகளை எழுப்பி வர... மேலும் பார்க்க

"அன்று இபிஎஸ் சொன்ன வார்த்தை; அவராகவே பதவி விலகுவதுதான் மரியாதை" - ஓ.பி.எஸ் பதிலடி

தூத்துக்குடியில் இன்று (மார்ச் 27) செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, " 'அ.தி.மு.க'வில் ஓ.பன்னீர் செல்வத்தை இணைக்க வாய்ப்பில்லை. பிரிஞ்சது, பிரிஞ்சதுதான். இனி அவரை சேர்ப்பதற்கு வாய்ப்பேயில்ல... மேலும் பார்க்க

மீனவர்கள் 11 பேர் கைது; இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் தொடரும் சிறைபிடிப்பு!

பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதியான மன்னார் வளைகுடா கடல் பரப்பில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து சிறை பிடித்து வருகிறது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பது பல ஆண... மேலும் பார்க்க

Ilaiyaraaja: `இளையராஜாவுக்கு பாராட்டு விழா' - தேதியை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்

லண்டனில் கடந்த மாதம் மார்ச் 8-ம் தேதி 'சிம்பொனி 01 'Valiant'' சிம்பொனியை இசையமைப்பாளர் இளையராஜா அரங்கேற்றம் செய்திருந்தார்.லண்டனுக்குச் செல்லும் முன், இந்தியாவிலிருந்து தமிழர் ஒருவர் பண்ணைப்புரம் கிரா... மேலும் பார்க்க

'இந்தியாவின் இரும்பு மனிதர் அமித் ஷாவை, நம் இரும்பு மனிதர்...' - ஆர்.பி.உதயகுமார் சொல்லும் விளக்கம்

2021 சட்டமன்றத் தேர்தலில் 'பா.ஜ.க'வுடன் கூட்டணி வைத்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க, பல சிக்கல்களால் பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாதுஎன்று கூறிவந்தது. இருப்பினும் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்க... மேலும் பார்க்க