அம்பானியின் மகன் இஸட் பிரிவு பாதுகாப்புடன் 5-ஆவது நாளாக நடைப்பயணம்! எதற்காக?
ஐபிஎல் தொடரில் மிட்செல் ஸ்டார்க்கின் ஆதிக்கம்: ஹெட், கிஷன், நிதீஷ் ஆட்டமிழப்பு!
தில்லி கேபிடல்ஸ் அணி வீரர் மிட்செல் ஸ்டார்க் 3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
முதல் ஓவரில் ஸ்டார்க் ஓவரில் அபிஷேக் சர்மா ரன் அவுட்டானார். 3ஆவது ஓவரில் 1, 3ஆவது பந்துகளில் முறையே இஷான் கிஷன், நிதீஷ் ரெட்டி ஆட்டமிழந்தார்கள்.
அடுத்ததாக 5ஆவது ஓவரில் ஸ்டார்க் ஓவரில் முதல் பந்திலேயே டிராவிஸ் ஹெட்டும் ஆட்டமிழ்ந்தார்.
ஐபிஎல் தொடரில் இந்த மூன்று பேட்டர்களுக்குமே ஸ்டார்க் சிம்ம சொப்பனமாக இருக்கிறார்.
சன்ரைசர்ஸ் 9 ஓவரில் 98/4 ரன்கள் எடுத்துள்ளது. அனிகேத் வர்மா, கிளாசன் விளையாடி வருகிறார்கள்.
மிட்செல் ஸ்டார்க்கின் ஆதிக்கம்
டிராவிஸ் ஹெட் vs மிட்செல் ஸ்டார்க்
இன்னிங்ஸ்: 2
ரன்கள்: 10
பந்துகள்: 7
2 முறை ஆட்டமிழப்பு
நிதீஷ் ரெட்டி vs மிட்செல் ஸ்டார்க்
இன்னிங்ஸ்: 3
ரன்கள்: 7
பந்துகள்: 12
2 முறை ஆட்டமிழப்பு
இஷான் கிஷன் vs மிட்செல் ஸ்டார்க்
இன்னிங்ஸ்: 3
ரன்கள்: 16
பந்துகள்: 8
2 முறை ஆட்டமிழப்பு