செய்திகள் :

ஸ்மார்ட்போன்களில் நேரம் செலவிடும் இந்தியர்களால் வருவாய் அதிகரிப்பு!

post image

இந்தியாவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை வளர்ச்சியடைவதாக இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் எர்ன்ஸ் & யங்கின் ஆய்வில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை, 2024 ஆம் ஆண்டில் 2.5 டிரில்லியனாக வளர்ச்சியடைந்தது. தொலைக்காட்சியைவிட டிஜிட்டல் மீடியா அதிக வளர்ச்சி பெற்றதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 3.3 சதவிகித வளர்ச்சியாக இருந்தாலும், விரிவாக்கத்துடன் ஒப்பிடுகையில் 8.3 சதவிகித வேகம் குறைவுதான்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் பங்களிப்பு 0.73 சதவிகிதமாக உள்ளது.

2024 ஆம் ஆண்டில், இந்தியர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் 1.1 டிரில்லியன் மணிநேரங்களை செலவிட்டனர்; இந்த 1.1 டிரில்லியன் மணிநேரங்களில் 70 சதவிகிதம், சமூக ஊடகங்கள், கேமிங், விடியோ ஸ்ட்ரீமிங் தளங்கள் என சராசரியாக ஒரு நாளைக்கு 5 மணி நேரம் செலவிட்டுள்ளனர். இதன் காரணமாக, டிஜிட்டல் விளம்பரம் 17 சதவிகிதம் அதிகரித்து, ரூ. 70,000 கோடியை எட்டியது; இது, மொத்த விளம்பர வருவாயில் 55 சதவிகிதம்.

2024-ல் ஒட்டுமொத்தமாக மந்த நிலை இருந்தாலும், விளம்பர வருவாய் 8.1 சதவிகிதம் அதிகரித்தது. மேலும், நிகழ்ச்சிகளை ஒழுங்கமைக்கும் துறைகளும் 15 சதவிகித வளர்ச்சியடைந்ததுடன், முதல்முறையாக ரூ. 10,000 கோடியைத் தாண்டியது.

2024-ல் தேர்தல் மற்றும் அரசு தொடர்பான நிகழ்வுகள், தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்களின் திருமணங்கள், சர்வதேசக் கலைஞர்களின் பிரமாண்ட கச்சேரிகளால்தான் இந்த வருவாய் சாத்தியமானது என்கின்றனர்.

விளம்பர வருவாய் அதிகரிப்பு, நிகழ்வு வளர்ச்சி, சந்தா சரிவுகள் இருந்தாலும், 2025 ஆம் ஆண்டிலும் இந்த வளர்ச்சி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025-ல் 7.2 சதவிகித விரிவாக்கத்துடன், மொத்த தொழில் அளவை 2.68 டிரில்லியன் டாலர் மதிப்பை எட்டும் வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வில் கூறுகிறது.

இதையும் படிக்க:ரஷிய அதிபர் புதின் கார் வெடித்து சிதறியது!

அம்பானியின் மகன் இஸட் பிரிவு பாதுகாப்புடன் 5-ஆவது நாளாக நடைப்பயணம்! எதற்காக?

புது தில்லி: இந்தியாவின் கோடீஸ்வர தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி இஸட் பிரிவு பாதுகாப்புடன் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் தமது 30-ஆவது பிறந்தநாளை வரும் ஏப். 10-ஆம் தேதி கொண்டாடுவ... மேலும் பார்க்க

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் உள்ளிட்ட சேவையில் சிக்கல்..

எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், ஏப். 1ஆம் தேதி காலையில் இருந்து பகல் வரை பணப்பரிமாற்றம் உள்ளிட்ட சில சேவைகளில் சிக்கலை சந்தித்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.மொபைல் வங்கி, ஏட... மேலும் பார்க்க

நான் ஒரு யோகி.. அரசியல் முழு நேர வேலையல்ல.. சொன்ன முதல்வர் யார்?

புது தில்லி: தன்னுடைய முதல் அடையாளம் யோகி என்றும், தனது கடமை, உத்தரப்பிரதேச மக்களுக்கு சேவையாற்றுவது என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார்.நான் ஒரு யோகி என்றும், அரசியல் எனக்கு முழு நேர வே... மேலும் பார்க்க

குஜராத் பட்டாசு ஆலையில் பயங்கர தீ: 13 பேர் பலி!

குஜராத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர்.மேலும் பல தொழிலாளிகள் தீ விபத்துக்குள் சிக்கியிருக்கும் நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்ச... மேலும் பார்க்க

தொழிற்சாலையில் நைட்ரஜன் வாயு கசிவு: 3 பேர் பலி! பாதிக்கப்பட்டோருக்கு தீவிர சிகிச்சை!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானிலுள்ள ஒரு தொழிற்சாலையில் நைட்ரஜன் வாயு கசிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பேவார் மாவட்டத்திலுள்ள பாடியா பகுதியில் அமைந்துள்ள ஒரு வேதிப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் நிறுத்தப்பட்டிரு... மேலும் பார்க்க

விமான நிலையம் செல்லும் வழியில் ஜெர்மன் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை!

ஹைதராபாத்தில் விமான நிலையம் செல்லும் வழியில் ஜெர்மன் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். ஜெர்மனைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் ஹைதராபாத் நகரத்திற்கு சுற்றுலா வந்திருந்தார். தனது நண்பர்க... மேலும் பார்க்க