சர்தார் - 2 அறிமுக புரோமோ!
நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் - 2 படத்தின் அறிமுக புரோமோவை வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான சர்தார் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது.
இதிலும் நடிகர் கார்த்தியே நாயகனாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் எஸ். ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு சென்னை, மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: விஜய் சேதுபதி - பூரி ஜெகன்நாத் கூட்டணியில் புதிய படம்!
இந்த நிலையில், இப்படத்தின் அறிமுக புரோமோவை வெளியிட்டுள்ளனர். இதில், முதல் பாகத்தில் நடந்தவைகளை நினைவூட்டும் படியான காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும், நாளை (மார்ச் 31) சர்தார் - 2 படத்தின் முன்னோட்ட விடியோவை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.