Sujatha Karthikeyan: விருப்ப ஓய்வு பெறும் ஒடிஷாவின் 'பவர்ஃபுல் IAS' - யார் இவர்?
"அன்று இபிஎஸ் சொன்ன வார்த்தை; அவராகவே பதவி விலகுவதுதான் மரியாதை" - ஓ.பி.எஸ் பதிலடி
தூத்துக்குடியில் இன்று (மார்ச் 27) செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, " 'அ.தி.மு.க'வில் ஓ.பன்னீர் செல்வத்தை இணைக்க வாய்ப்பில்லை. பிரிஞ்சது, பிரிஞ்சதுதான். இனி அவரை சேர்ப்பதற்கு வாய்ப்பேயில்லை. அவர் இந்தக் கட்சியை எதிரிகளிடம் அடமானம் வைப்பதை எங்களால் தாங்க முடியவில்லை.
அவர் என்றைக்கு நாங்கள் கோவிலாக மதிக்கக்கூடிய 'அ.தி.மு.க' தலைமை கட்சி அலுவலகத்தில் ரவுடிகளைக் கூட்டிச் சென்று கூட்டம் நடத்தி, அதன் மீது தாக்குதல் நடத்தினாரோ அன்றைக்கு அவருக்கு 'அ.தி.மு.க'வில் இருப்பதற்குத் தகுதியில்லாமல் போனது. அந்த அடிப்படையில் அவரை இனி இணைக்க வாய்ப்பேயில்லை." என்று ஓ.பன்னீர் செல்வத்தைத் தாக்கிப் பேசியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமி பேசியதற்குப் பதிலளித்திருக்கும் ஓ.பன்னீர் செல்வம், " அதிமுக'வில் ஒற்றைத் தலைமை அமைந்தால் அனைத்துத் தேர்தலிலும் வெற்றிபெற்றுவிடுவேன் என்று பேசித்தான் தலைமைப் பதவியில் உடகார்ந்தார் இபிஎஸ். ஆனால், அவரால் ஒரு தேர்தலில்கூட வெற்றி பெற முடியவில்லை. பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அவராகவே விலகினால்தான் அவருக்கு மரியாதையாக இருக்கும். இல்லையென்றால் அவர் அவமரியாதையைச் சந்திப்பார். இபிஎஸ் தரப்பினர்தான் அதிமுக தலைமை அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். நாங்கள் அல்ல" என்று பேசியிருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
