மாயாவி டு ரெட்ரோ : `நமக்குள்ள ஏன் இந்த இடைவெளினு சூர்யா சார் கேட்ட கேள்வி' - சிங...
குஜராத் டைட்டன்ஸ் அணியில் மிடில் ஆர்டர் பிரச்னையா? ஷுப்மன் கில் பதில்!
குஜராத் டைட்டன்ஸ் அணியின் மிடில் ஆர்டர் குறித்து அந்த அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் அகமதாபாத் திடலில் நேற்று (மார்ச் 29) நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.
இதையும் படிக்க: சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவுக்கு சாதகமான சூழல் இல்லையா? புஜாராவுக்கு அதிர்ச்சியளித்த ஃபிளெமிங்!
முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான சாய் சுதர்ஷன் (68 ரன்கள்), ஷுப்மன் கில் (38 ரன்கள்), ஜோஸ் பட்லர் (39 ரன்கள்) எடுத்தனர். மிடில் ஆர்டரில் ஷாருக்கான் (9 ரன்கள்), ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு (18 ரன்கள்), ராகுல் திவாட்டியா (0 ரன்), ரஷித் கான் (6 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.
மிடில் ஆர்டரில் பிரச்னையா?
மும்பைக்கு எதிரான நேற்றையப் போட்டியில் மிடில் ஆர்டர் சரியாக விளையாடாத நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் மிடில் ஆர்டரில் எந்த ஒரு பிரச்னையும் இல்லை என அந்த அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிக்க: அதிரடியாக விளையாட எங்களிடம் வீரர்கள் இருக்கிறார்கள், தப்பு கணக்கு வேண்டாம்: சிஎஸ்கே பயிற்சியாளர்
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: எங்களது அணியில் மிடில் ஆர்டரில் எந்த ஒரு பிரச்னையும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான கடந்த போட்டியில் கிட்டத்தட்ட 250 ரன்கள் என்ற இலக்கை துரத்தினோம். அந்த போட்டியில் மிடில் ஆர்டரில் விளையாடிய ரூதர்ஃபோர்டு 46 ரன்கள் குவித்தார். குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனை மோசமாக தொடங்கவில்லை. அதனால், நாங்கள் எங்களது அணியின் மிடில் ஆர்டர் குறித்து எந்தவொரு கவலையும் படவில்லை என்றார்.
இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான தனது முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.