மாயாவி டு ரெட்ரோ : `நமக்குள்ள ஏன் இந்த இடைவெளினு சூர்யா சார் கேட்ட கேள்வி' - சிங...
மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகள்; 163 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஹைதராபாத்!
தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 163 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஐபிஎல் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
இதையும் படிக்க: அதிரடியாக விளையாட எங்களிடம் வீரர்கள் இருக்கிறார்கள், தப்பு கணக்கு வேண்டாம்: சிஎஸ்கே பயிற்சியாளர்
அனிகேத் அதிரடி, 164 ரன்கள் இலக்கு
டாஸ் வென்று முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 18.4 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சன்ரைசர்ஸ் அணிக்கு தொடக்கமே சிறப்பாக அமையவில்லை. அபிஷேக் சர்மா 1 ரன், இஷான் கிஷன் 2 ரன், நிதீஷ் ரெட்டி 0 ரன், டிராவிஸ் ஹெட் 22 ரன்கள் எடுத்து ஏமாற்றமளித்தனர். 37 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து சன்ரைசர்ஸ் திணறியது.
இதனையடுத்து, அனிகேத் வர்மா மற்றும் ஹெய்ன்ரிச் கிளாசன் ஜோடி சேர்ந்தனர். அனிகேத் வர்மா களமிறங்கியது முதலே அதிரடியாக விளையாடி அசத்தினார். கிளாசன் 19 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அதிரடியாக விளையாடிய அனிகேத் வர்மா 41 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும்.
இதையும் படிக்க: சன்ரைசர்ஸின் அதிரடியை கட்டுப்படுத்துவோம்: தில்லி கேபிடல்ஸ் இளம் வீரர்
தில்லி கேபிடல்ஸ் தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், மோஹித் சர்மா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தில்லி கேபிடல்ஸ் அணி விளையாடி வருகிறது.