எல்லையைக் கடந்து பரவும் தொற்றினால் 10 லட்சம் பேருக்கு ஆபத்து! காப்பாற்றுமா அரசின...
ஒடிஸா அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் ரயில்.. மீட்புப் பணிகள் துரிதம் - என்ன நடந்தது?
இன்று பெங்களூருவில் இருந்து சென்ற ரயில் ஒன்று ஒடிசா மாநிலம் அருகே தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
இது பெங்களூருவில் இருந்து குவாஹாத்தி செல்லும் காமக்யா விரைவு ரயில் ஆகும்.

காரணம் என்ன?
ஒடிசா மாநிலத்தின் கட்டாக் அருகில் உள்ள மாங்குலொ என்ற இடத்தில் இந்த ரயில் தடம் புரண்டு, அதன் 2 பெட்டிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இதுவரை இந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் படுகாயமடைந்தவர்கள் குறித்து எந்த தகவலும் கொடுக்கப்படவில்லை.
சமீபமாக, இந்தியாவில் ரயில் விபத்துகள் அதிகம் நடந்துவருகின்றன. இதனால், பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.