'திரும்ப போய்விடுங்கள்' - வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை - காரணம்...
'இந்தியாவின் இரும்பு மனிதர் அமித் ஷாவை, நம் இரும்பு மனிதர்...' - ஆர்.பி.உதயகுமார் சொல்லும் விளக்கம்
2021 சட்டமன்றத் தேர்தலில் 'பா.ஜ.க'வுடன் கூட்டணி வைத்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க, பல சிக்கல்களால் பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாது என்று கூறிவந்தது. இருப்பினும் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணி குறித்த பேச்சுகள் தமிழ்நாடு அரசியலில் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றன.
அதற்கேற்ப நேற்று முன்தினம் (மார்ச் 25) எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் டெல்லிக்குச் சென்றிருந்தனர். டெல்லியில் இருக்கும் அ.தி.மு.க அலுவலகத்தைப் பார்வையிட்ட அவர்கள், அதன் பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்துக்கே நேரில் சென்று சந்திருந்தனர். இது 'பா.ஜ.க - அ.தி.மு.க' கூட்டணி பேச்சுகள் அரசியலில் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.

இதுகுறித்து 'அ.தி.மு.க' முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார், "இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படுகின்ற சர்தார் வல்லபாய் படேல் உடைய மறுவடிவம் என பார்க்கப்படுகின்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நம் தாய் தமிழ்நாட்டின் இரும்பு மனிதர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசியிருகின்றார்.
இதுபற்றி அவரவர் பார்வையில், அவரவர் விருப்பத்திற்கு என்னவேண்டுமாலும் கருத்துச் சொல்லலாம்.

ஆனால், ஒட்டுமொத்த உலகப் பார்வையில் தமிழ் இனத்தின் நலனுக்காக அவர் முன் வைத்திருக்கும் கோரிக்கைகளை தமிழ்நாட்டில் மக்களிடம் எடுத்துச் செல்வது நம் கடமை. இருமொழிக் கொள்கையைக் கடைபிடிக்க வேண்டும், நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது நடக்க வேண்டும் உள்ளிட்ட பல பல்வேறு கோரிக்கைகளையும், மக்கள் பிரச்னைகளையும்தான் அமித்ஷா அவர்களிடம் முன்வைத்திருக்கிறோம்" என்று பேசியிருக்கிறார்.