அம்பானியின் மகன் இஸட் பிரிவு பாதுகாப்புடன் 5-ஆவது நாளாக நடைப்பயணம்! எதற்காக?
"எதையும் மாற்றிப் பேசவில்லை; எந்தக் கட்சியையும் அழித்து வளர மாட்டோம்" - அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கூட்டணி குறித்து நான் பேச முடியாது. உள்துறை அமைச்சரின் கருத்தையே இறுதியாக எடுத்துக் கொள்ளுங்கள். தேசிய ஜனநாயக கூட்டணி, தென் தமிழகத்தில் ஒரு மாதிரியாகவும், கொங்கு மண்டலத்தில் ஒரு மாதிரியாகவும் இருக்கும்.

இதுகுறித்து டெல்லியில் பேசியுள்ளோம். தமிழகத்தில் ஐந்து மண்டலங்களில், மூன்று மண்டலங்களில் வெற்றி பெற்றால் தான் ஆட்சிக்கு வர முடியும். கட்சியின் தலைவராக அதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
கூட்டணி குறித்து எங்கள் தலைவர்கள் சரியான முடிவு எடுப்பார்கள். அவர்களிடம் சொல்ல வேண்டியதை நான் சொல்லிவிட்டேன். அண்ணாமலை எதையும் மாற்றி பேசுபவன் கிடையாது. எனக்கு பாஜக முதன்மையானது.

பாஜகவின் எல்லா முடிவுகளும் தொலைநோக்குப் பார்வையுடன் இருக்கும். என்னால் யாருக்கும் எந்த பிரச்னையும் இருக்காது. நான் மாறி மாறி பேசுபவன் கிடையாது. என்னுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. பாஜகவின் வளர்ச்சி மட்டுமே எனக்கு முக்கியம்.
அதிமுகவில் இருக்கும் பிரச்னைக்குள் செல்ல விரும்பவில்லை. பாஜக எதற்காக மற்றொரு கட்சி விவகாரத்தில் தலையிட வேண்டும். எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ளார். பாஜக இன்னொரு கட்சியை அழித்து வளரும் என்றால், பாஜகவும் அழிந்துவிடும் என்று தான் சொல்லி வருகிறேன்.

பாஜக எந்தக் கட்சியையும் அளித்து வராது. ஐபிஎஸ் ரேங்கில் என்னுடைய ரேங்க் 2. சொந்தமாக நின்று நிலைத்து பேசுபவன் நான். எனக்கு கொஞ்சம் வாய் பேச்சு, குறும்பு அதிகம். தன்மானம் கொஞ்சம் அதிகம். வைராக்கியம் அதிகம். நான் இங்கு பவருக்காக வரவில்லை.” என்றார்.