பிரபாஸ் பட அப்டேட் பகிர்ந்த இயக்குநர் சந்தீப்!
பிரபாஸ் நடிக்கவிருக்கும் ஸ்பிரிட் படத்தின் அப்டேட்டை மெக்சிகோ நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் சந்தீப் வங்கா கூறியுள்ளார்.
அர்ஜுன் ரெட்டி, அனிமல் திரைப்படங்களின் மூலம் இந்தியா முழுவதும் புகழ்பெற்றவர் இயக்குநர் சந்தீப் வங்கா.
அனிமல் திரைப்படத்துக்குப் பிறகு தற்போது நடிகர் பிரபாஸுக்காக ஸ்பிரிட் எனும் கதையை எழுதியுள்ளார்.
இந்தப் படத்தில் பிரபாஸ் இரட்டை வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
பாலிவுட் பிரபலங்களான சயிப் அலிகான், கரீனா கபூர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இயக்குநர் மெக்சிகோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியதாவது:
நான் மெக்சிகோ வந்தது ஸ்பிரிட் படத்தின் படப்பிடிப்புக்கான இடங்களை பார்வையிடவே. தற்போதைக்கு இதுதான் ஸ்பிரிட் படத்துக்கான அப்டேட். நாளை மீண்டும் ஹைதராபாத்துக்கு செல்லவிருக்கிறேன் என்றார்.
இந்தப் படத்தை பத்ரகாளி பிக்சர்ஸ், டி- சீரிஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.