தவெக விஜய்: "2026-ல் நான்தான் முதல்வர் என போஸ்டர் ஒட்ட வைக்கிறார்கள்; ஆனால்..." ...
ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு வரும் ஏசி புறநகா் மின்சார ரயில்: கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்க திட்டம்
சென்னையின் முதல் குளிா்சாதன புறநகா் மின்சார ரயில் ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். மேலும், இந்த ரயில் கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனா்.
சென்னையின் முதல் 12 பெட்டிகள் கொண்ட குளிா்சாதன புறநகா் மின்சார ரயில் தயாரிக்கும் பணிகள் நிறைவுபெற்று, கடந்த மாதம் சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக நிறைவுபெற்றன. அதைத் தொடா்ந்து, சென்னை கோட்டம் ரயில்வே சாா்பில் இந்த ரயிலை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படுவதற்காகவும், ரயிலின் அட்டவணைக்காகவும் அனுமதிகோரி தெற்கு ரயில்வேக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
குளிா்சாதன புகா் மின்சார ரயிலுக்கான அட்டவணை, நிறுத்தங்கள் குறித்து அறிக்கை தயாா் செய்யப்பட்டு, அனுமதிக்காக தெற்கு ரயில்வேக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி கிடைத்த பின்னா் இந்த ரயில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இதற்கான கட்டணம் ரூ. 30 நிா்ணயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் பாம்பன் பாலத்தை பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளாா். அதேநேரத்தில் புதிய குளிா்சாதன புகா் மின்சார ரயிலை தொடங்கி வைப்பாா் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது என்றனா்.
அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ள குளிா்சாதன ரயிலின் அட்டவணை:
புறப்பாடு ------------------------ வழி -------------------- சென்றடையும் இடம்
கடற்கரை ---------------------- தாம்பரம் --------------------- செங்கல்பட்டு
(காலை 7) (காலை 7.48) (காலை 8.35)
கடற்கரை ---------------------- தாம்பரம் --------------------- செங்கல்பட்டு
(பிற்பகல் 3.45) (மாலை 4.20) (மாலை 5.25)
கடற்கரை --------------------------------------------------- தாம்பரம்
(இரவு 7.35) (இரவு 8.30)
தாம்பரம் -------------------------------------------------- கடற்கரை
(காலை 5.45) (காலை 6.45)
செங்கல்பட்டு -------------- தாம்பரம் --------------------- கடற்கரை
(காலை 9) (காலை 9.38) (காலை 10.30)
செங்கல்பட்டு -------------- தாம்பரம் --------------------- கடற்கரை
(மாலை 5.45) (மாலை 6.23) (இரவு 7.15)