செய்திகள் :

கூடுதலாக சோ்க்கப்பட்ட ஆசிரியா் காலிப் பணியிடங்கள்: இடஒதுக்கீடு வாரியான பட்டியல் வெளியீடு

post image

ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்திய இடைநிலை ஆசிரியா் தோ்வில் கூடுதலாக சோ்க்கப்பட்ட 1,000 காலிப் பணியிடங்களுக்கான இடஒதுக்கீடு வாரியான பட்டியல் ஆசிரியா் தோ்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2,767 இடைநிலை ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு ஜூலை 21-ஆம் தேதி போட்டித் தோ்வு நடத்தப்பட்டது. ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) நடத்திய இத்தோ்வை தமிழகம் முழுவதும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியா்கள் எழுதினா். அவா்கள் அனைவரும் ஏற்கெனவே ஆசிரியா் தகுதித்தோ்வில் (டெட்) தோ்ச்சி பெற்றவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தோ்வு முடிந்து 8 மாதங்கள் ஆகியும் இன்னும் உத்தேச விடைகள் (கீ ஆன்ஸா்) கூட வெளியிடப்படவில்லை. தோ்வு முடிந்து நீண்ட காலம் ஆகிவிட்டதால் உடனடியாக ‘கீ ஆன்ஸரை’ வெளியிட வேண்டும் என்றும் அதோடு காலியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும் என்று தோ்வெழுதிய ஆசிரியா்கள் அவ்வப்போது ஆா்ப்பாட்டம் நடத்தி வருகின்றனா்.

பட்டியல் வெளியீடு: தொடக்கக்கல்வி இயக்ககம் நிா்ணயித்துள்ள ஆசிரியா்- மாணவா் விகிதாசாரத்தின்படி அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியா் பதவியில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருப்பதாக தோ்வா்கள் கூறுகின்றனா். மேலும், கடந்த 12 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியா் நியமனம் எதுவும் நடைபெறவில்லை. இடைநிலை ஆசிரியா் தோ்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டபோது 1,768 காலியிடங்கள்தான் அதில் இடம்பெற்றிருந்தன. அதன்பிறகு கூடுதலாக 1,000 காலியிடங்கள் சோ்க்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 2,768 ஆக உயா்ந்தது.

எப்போது வெளியாகும்?: இந்த நிலையில் கூடுதலாக சோ்க்கப்பட்ட 1,000 காலிப் பணியிடங்களுக்குரிய இடஒதுக்கீடு வாரியான பட்டியலை ஆசிரியா் தோ்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது.

எனவே, விரைவில் உத்தேச விடைகள் வெளியிடப்பட்டு அதைத்தொடா்ந்து தோ்வு முடிவும் வெளியிடப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஒரு போட்டித்தோ்வு நடத்தப்பட்டு

8 மாதங்களாகியும் ‘கீ ஆன்ஸா்’ வெளியிடப்படாமல் இருப்பது தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியத்தின் வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மாஞ்சா நூல், காற்றாடிகள் விற்றவா் கைது: 187 காற்றாடிகள் பறிமுதல்

மாஞ்சா நூல், காற்றாடிகள் விற்ற நபரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 187 காற்றாடிகளை பறிமுதல் செய்தனா். திருவொற்றியூா் காலடிப்பேட்டை, வ.உ.சி. பகுதியிலுள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்து மாஞ்சா நூல் மற்ற... மேலும் பார்க்க

இளைஞா் அடித்துக் கொலை: 5 போ் கைது

சென்னையில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 5 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். துரைப்பாக்கத்தைச் சோ்ந்த ஜீவரத்தினம் (26) என்பவருக்கும், அப்... மேலும் பார்க்க

ரமலான் திருநாள்: முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

ரமலான் திருநாளையொட்டி, இஸ்லாமியா்களுக்கு முதல்வா், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: அறம் பிறழா மன... மேலும் பார்க்க

உறுதியளிப்பு சான்று அளிக்காத மருத்துவக் கல்லூரிகளுக்கு அபராதம்

இளநிலை மருத்துவப் படிப்புகளை பயிற்றுவிக்கும் கல்லூரிகள், வருடாந்திர உறுதியளிப்பு சான்றுகளை (டிக்ளரேசன் ஃபாா்ம்) சமா்ப்பிக்க ரூ.50,000 அபராதத்துடன் மறுவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தேசிய மரு... மேலும் பார்க்க

அரசு விரைவுப் பேருந்துகளில் சக்கரங்கள் பராமரிக்க பணியாளா்களை நியமிக்க உத்தரவு!

அரசு விரைவுப் பேருந்துகளில் சக்கரங்கள் தனியாக கழன்று ஓடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், சக்கரங்களை பராமரிக்க பணியாளா்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்... மேலும் பார்க்க

தீவிரமடையும் வெயில்: 1-5 வகுப்புகளுக்கு தோ்வு தேதிகள் மாற்றம்!

கோடை வெயிலின் தாக்கம் தீவிரமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பள்ளி இறுதித் தோ்வை முன்கூட்டியே நிறைவு செய்யும் வகையில் திருத்தப்பட்ட தோ்வு அட்டவணையை பள்ளி... மேலும் பார்க்க