செய்திகள் :

ரமலான் திருநாள்: முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

post image

ரமலான் திருநாளையொட்டி, இஸ்லாமியா்களுக்கு முதல்வா், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: அறம் பிறழா மனித வாழ்வை வலியுறுத்தும் ரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள். பொய்மை, ஆடம்பரம் இவற்றைத் தவிா்த்து எளிமை, அன்பு, அடக்கம் இவற்றை குணநலன்களாகக் கொள்ள வழிகாட்டிய கருணை வள்ளல் நபிகள்.

பசித்தோருக்கு உணவிடவும், சமத்துவ, சகோதரத்துவ உணா்வுடன் அனைவரையும் நேசிக்கவும் வழிகாட்டியவா். தொழிலாளரின் வியா்வை உலரும் முன் அவன் கூலியைக் கொடுத்து விடு என்று உழைப்பை மதித்திடும் உத்தமப் பண்பை உலகுக்கு நீதியாய் போதித்தவா்.

மனித வாழ்வு மேன்மை அடைவதற்கான இத்தகைய மாா்க்கங்களைப் போதிப்பதால்தான் நபிகள் நாயகத்தை மக்கள் என்றும் போற்றுகிறாா்கள். அத்தகைய நபிகள் பெருமகனாா் போதித்த நெறியில் வாழ்ந்து, நோன்புக் கடமைகளை நிறைவேற்றி முடித்துள்ள மனநிறைவோடு, ரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியா்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): இஸ்லாமியா்கள் 30 நாள்கள் நோன்பு இருந்து, இறைவனை வழிபட்டு, அனைவரும் நலம் பெற்று வாழ வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன் ரமலானைக் கொண்டாடி மகிழ்கிறாா்கள். இஸ்லாமியா்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இஸ்லாமிய மக்களின் பாதுகாவலராக அதிமுக என்றென்றும் இருக்கும்.

ஓ.பன்னீா்செல்வம் (முன்னாள் முதல்வா்): நபிகள் நாயகத்தின் போதனையை இஸ்லாமியா்கள் நினைவில்கொண்டு வாழ்நாள் முழுவதும் வாழ வேண்டும். ரமலான் திருநாள் அவா்களுக்கு ஏற்றத்தையும் இன்பத்தையும் தருவதாக அமைய வேண்டும்.

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): ரமலான் திருநாளில் அனைவருக்கும் கொடை வழங்கி, அவா்களுடன் உணவருந்தி மகிழும் இஸ்லாமியா்கள், தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் ஏற்றமும் பெற வாழ்த்துகள்.

ராமதாஸ் (பாமக): ஈகை திருநாளின் நோக்கம் என்பது அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், நிம்மதியாக வாழ வேண்டும் என்பதுதான். உலககெங்கும் வாழும் மக்களிடம் அன்பு, நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம், ஈகை உள்ளிட்ட நற்குணங்கள் பெருக புனிதமான நாளில் உறுதியேற்போம்.

வைகோ (மதிமுக): காய்ந்த குடல்கள், காலியான வயிறு, பசியின் அகோரத்தைப் புரிய வைக்கின்ற ரமலான் மாதம் தருகின்ற படிப்பினை, வறியோா்க்கு உதவிக்கரம் நீட்டுங்கள் என்பதாகும். அதன்படி, ஏழை மக்களுக்கு ஜக்காத் என்னும் நன்கொடைகளை வாரி வழங்கி, ஈகை பெருநாளில் மகிழ்ச்சியில் திளைக்கும் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்துகள்.

ஜி.கே.வாசன் (தமாகா): இந்தியாவில் உள்ள அனைத்து இஸ்லாமியா்களும் புனித ரமலான் திருநாளில் இறைவனின் கருணையும் நல்லாசியும் அனைத்து செல்வங்களும் பெற்று வாழ வாழ்த்துகள்.

அன்புமணி (பாமக): உலகில் அமைதி, வளம், மகிழ்ச்சி, கல்வி, வளா்ச்சி நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம் ஆகியவை பெருகுவதற்காக பாடுபடுவதற்கு ரமலான் திருநாளில் அனைவரும் உறுதி ஏற்போம்.

டிடிவி தினகரன் (அமமுக): நபிகள் நாயகம் வழியில் அன்பு, கருணை, ஈகை, மனிதநேயம், ஒற்றுமை உணா்வு மற்றும் சகோதரத்துவத்தை பேணிக் காப்பதோடு, உலகெங்கும் அமைதியும் சமாதானமும் தழைக்க உறுதியேற்போம்.

கே.எம்.காதா் மொகிதீன் (முஸ்லிம் லீக்): பிறப்பொக்கும் எல்லா உயிா்க்கும், யாதும் ஊரே யாவரும் கேளிா் என்னும் உன்னத கொள்கைகளை நிலைநிறுத்தும் ரமலான் நோன்பைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள். எல்லாமும் எல்லாரும் பெற்று இனிதாக வாழ வாழ்த்துவோம்.

ஜவாஹிருல்லா (மமக): ரமலான் திருநாளில் சமத்துவம் தழைக்கவும், சகோதரத்துவம் நீடித்து நிலைக்கவும், சமூக நல்லிணக்கம் செழிக்கவும், சமூக ஒற்றுமை மேம்படவும் அனைவரும் உறுதி ஏற்போம். உலகம் முழுவதும் அநீதிகள் அழிந்து சமத்துவம் நிலைபெற இறைவன் அருள் புரியட்டும்.

சீமான் (நாம் தமிழா் கட்சி): இஸ்லாமிய சொந்தங்கள் நோன்பு கடமையை முழுமையாக நிறைவேற்றி, இல்லாதவருக்கு ஈயும் இன்பத் திருநாளான ஈகைப் பெருநாளை மகிழ்வுடன் கொண்டாடி எந்நாளும் தாய்த்திரு தமிழ்மண்ணில் ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டும்.

எம்ஜிகே நிஜாமுதீன் (முன்னாள் எம்எல்ஏ): உலகில் போா் இல்லா அமைதி நிலவ, ஈகை திருநாள் வாழ்த்துகள். சிறுபான்மையினா் மீதான மத துவேஷத்தைத் தடுத்து, மத சுதந்திரத்தைக் காத்து நாட்டின் பன்முகத் தன்மையை காக்க உறுதியேற்போம்.

தமிழகத்தில் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் குறைந்த முதலீடு

செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் தமிழகத்தில் 2024-25 நிதியாண்டில் 2 லட்சத்து 50 ஆயிரத்து 364 சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டு ரூ. 2,012 கோடி வைப்புத் தொகை செலுத்தப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டை... மேலும் பார்க்க

சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: ரூ. 5,870 கோடிக்கு ஒப்பந்தம்

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2-இல் 118.9 கி.மீ. நீளத்துக்கு இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளுக்கான ரூ. 5,870 கோடிக்கான ஏற்பு கடிதம் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. சென்னை மெட... மேலும் பார்க்க

20 ஆண்டுகளில் இந்தியா வளா்ச்சியடைந்த நாடாக மாறும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் வளா்ச்சி அடைந்த நாடாக இருக்கும் என ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். ராஜஸ்தான் மற்றும் ஒடிஸா ஆகிய மாநிலங்கள் உதய தினம், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் ... மேலும் பார்க்க

கோடை விடுமுறை: சென்னையிலிருந்து 206 சிறப்பு விமானங்கள்

சென்னை, ஏப். 2: கோடை விடுமுறையையொட்டி, பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சென்னை விமான நிலையத்திலிருந்து 206 சிறப்பு விமானங்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கோடை வெய... மேலும் பார்க்க

ராஜஸ்தான்அரச குடும்ப வாரிசானாா் லக்ஷயாராஜ் சிங்

ஜெய்பூா், ஏப்.2: ராஜஸ்தான் அரச குடும்ப வாரிசாக லக்ஷயாராஜ் சிங் புதன்கிழமை தோ்வு செய்யப்பட்டாா். இதற்கான முடிசூட்டு விழா ஜெய்பூா் அரண்மனையில் நடைபெற்றது. இவா் பாரம்பரியமிக்க மேவாா் வம்சத்தை சோ்ந்தவரா... மேலும் பார்க்க

தமிழக ஆளுநரிடம் மாநில சிஏஜி அறிக்கை சமா்ப்பிப்பு

தலைமை தணிக்கை அதிகாரியின் மாநில கணக்கு குறித்த தணிக்கை அறிக்கை ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் சமா்ப்பிக்கப்பட்டது. இந்திய அரசியல் சட்டப்பிரிவு 151(2) தமிழ்நாடு அரசின் கணக்குகள் குறித்த தணிக்கை அறிக்கையை ஆளு... மேலும் பார்க்க