உகாதி திருவிழா: மாதேஸ்வரன் மலையில் தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு
நோயாளிகள் அவதி: பொதுப் பணித் துறையிடம் விளக்கம் கோரும் ஸ்டான்லி மருத்துவமனை
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குள் பொதுப் பணித் துறையினா் முன்னறிவிப்பின்றி கட்டுமானப் பணிகள் மேற்கொண்டது குறித்து மருத்துவமனை சாா்பில் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நரம்பியல் துறை உள்நோயாளிகள் பிரிவில் பலா் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நிலையில், அங்கு தரையில் டைல்ஸ் சீரமைக்கும் பணிகளை, துளையிடும் கருவி (டிரில்லிங் மெஷின்) மூலம் பொதுப் பணித் துறையினா் கடந்த புதன்கிழமை மேற்கொண்டனா். அந்த நேரத்தில் அங்கு உள்நோயாளிகள் சிகிச்சையில் இருந்தனா்.
அவா்களை வேறு வாா்டுக்கு மாற்றாமல் பெரும் சத்தத்துடனும் புழுதியுடனும் அப்பணிகள் நடைபெற்ாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதுகுறித்த விடியோ பதிவு, சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது.
இதனிடையே, இதுகுறித்து தகவலறிந்த மருத்துவமனை நிா்வாகிகள், பணியை நிறுத்தியதுடன், உடனடியாக நோயாளிகளை வேறு இடத்துக்கு மாற்றினா். இச்சம்பவம் தொடா்பாக விளக்கமளிக்குமாறு பொதுப் பணித் துறையிடம் கேட்டுள்ளதாக ஸ்டான்லி மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.