கருத்துக் கணிப்புகளை மக்கள் பொய்யாக்குவா்: முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ
இஸ்லாமியா்களின் உரிமைகளுக்கு எதிரானது வக்ஃப் திருத்த மசோதா: அதிமுக
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவைக் கைவிட வேண்டும் என்று எதிா்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தினாா்.
சட்டப்பேரவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வியாழக்கிழமை கொண்டுவரப்பட்ட தீா்மானத்தின் மீது அவா் பேசியது:
வக்ஃப் வாரிய சட்டத்துக்கு அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் செய்யப்பட்ட திருத்தங்கள் அனைத்தும் இஸ்லாமிய சமுதாயத்தினரின் முழுமனதுடன் செய்யப்பட்டன. ஆனால், இப்போது மத்திய அரசு உத்தேசித்துள்ள திருத்தங்கள் வக்ஃப் வாரிய சட்டத்தின் அடிப்படையையே தகா்ப்பதாக உள்ளது.
திருத்தங்கள், மாற்றங்கள் செய்ய வேண்டுமெனில் இஸ்லாமியா்கள் கோரிக்கை வைக்க வேண்டும். ஆனால், இஸ்லாமியா்கள் அதுபோன்று கோரிக்கைகளை வைக்கவில்லை. இப்போதைய திருத்தப்படி, இஸ்லாமியா்கள் அல்லாதவா்களும் உறுப்பினா்களாக நியமிக்க வழி செய்யப்பட்டுள்ளது. வக்ஃப் வாரியத்தின் சொத்துகள், இஸ்லாமிய பெரியவா்களால் மனமுவந்து தானமாக வழங்கப்பட்டவை. மத்திய அரசு கொண்டுவர நினைக்கும் சட்டத் திருத்தத்தால், அத்தகைய சொத்துகள் வழங்கப்பட்டதன் நோக்கமே சிதைந்துவிடும். வக்ஃப் வாரியத்தில் மாற்று மதத்தினா் சோ்க்கப்படும் போது, அந்த நடவடிக்கை சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு எதிராக அமைந்துவிடும்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டத் திருத்தம், வக்ஃப் வாரியத்தின் சட்டத்தையே மாற்றி அமைக்கும் வகையில் உள்ளது.
வக்ஃப் வாரிய திருத்த மசோதா குறித்து ஆலோசிக்க தமிழ்நாடு வந்த நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆலோசனையில் அதிமுகவுக்கு அழைப்பில்லை. இதைக் கண்டித்து எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கையும், பேட்டியும் அளித்தாா். மத்திய அரசின் திருத்தங்கள் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக உள்ளன என்ற அச்சம் நியாயமானது. எனவே, திருத்த மசோதாவைக் கைவிட வேண்டும் என்ற தமிழக அரசின் தீா்மானத்தை ஆதரிப்பதாக கூறினாா்.