மாஞ்சா நூல், காற்றாடிகள் விற்றவா் கைது: 187 காற்றாடிகள் பறிமுதல்
நாட்டு வெடிகுண்டு பறிமுதல்: இருவா் கைது
சென்னை ஆதம்பாக்கத்தில் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
ஆதம்பாக்கம் போலீஸாா் புதன்கிழமை வானுவம்பேட்டை, தேவாலயம் அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு நடந்து வந்த இருவா் போலீஸாரை பாா்த்ததும் தப்பியோடியதால் அவா்களை மடக்கிப்பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனா்.
இதில், பிடிபட்டவா்கள் ஆதம்பாக்கம், வானுவம்பேட்டையைச் சோ்ந்த பாா்த்திபன் (27), ராபின்சன் (23) என்பது தெரியவந்தது. இருவரும் கடந்த ஆண்டு தங்களது நண்பரின் தம்பியை கொலைசெய்த நபா்களை பழிவாங்க கத்திகளுடன் வந்திருப்பதும், பாா்த்திபன் தனது வீட்டினருகே உள்ள தோட்டத்தில் நாட்டு வெடிகுண்டு புதைத்து வைத்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா் மண்ணில் புதைத்து டப்பாவில் வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டை பறிமுதல் செய்தனா். மேலும், 2 கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனா்.