செய்திகள் :

மகளிா் சொத்துகளுக்கு பத்திரப் பதிவு கட்டணம் நாளைமுதல் 1 % குறைவு: அரசாணை வெளியீடு!

post image

மகளிா் பெயரில் வீடு, மனை உள்ளிட்ட அனைத்து வகையான அசையா சொத்துகளையும் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யும்போது செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு மாா்ச் 14-இல் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தாபோது, சமூகத்தில் மட்டுமன்றி, அவரவா் குடும்பங்களிலும் மகளிருக்கான சமபங்கை உறுதி செய்யும் வகையில் ஏப்.1 முதல் மகளிா் பெயரில் பதிவு செய்யப்பட்டால், அந்த ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும் என்று அறிவித்தாா். அதைச் செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில் மகளிா் பெயரில் வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையா சொத்துக்களும் ரூ.10 லட்சம் மதிப்பு வரை பதிவு செய்யப்பட்டால், பதிவுக் கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும். இது ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒரு சதவீத கட்டணக் குறைப்பால் தற்போதைய பத்திரப் பதிவுகளில் 75 சதவீதம் பதிவுகள் வரை பயன்பெற வாய்ப்பு இருப்பதாகவும் அமைச்சா் தங்கம் தென்னரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வியாசர்பாடியில் சிறுவன் ஓட்டிய கார் கவிழ்ந்தது: 5 பேர் காயம்!

சென்னை வியாசர்பாடியில் சிறுவன் ஓட்டிச் சென்ற கார் கவிழ்ந்து செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்தனர்.சென்னை வியாசர்பாடி பகுதியில் இருந்து பேசின் பிரிட்ஜ் நோக்கி வேகமாக சென்றுகொண்டிருந்... மேலும் பார்க்க

அனைத்துவிதமான வசதிகளுடன் இலவச ஏசி ஓய்வறை... சென்னை மாநகராட்சி திட்டம்!

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் உணவுப்பொருள் விநியோக ஊழியர்களுக்காக குளிர்சாதன வசதியுடன்(ஏசி) கூடிய ஓய்வறை அமைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை போன்ற பெருநகரங்களில் உணவு, பொரு... மேலும் பார்க்க

இலங்கை அகதி தம்பதி மகளுக்கு இந்திய குடியுரிமை: மத்திய அரசு பரிசீலிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

இலங்கை தமிழ் அகதியாக தமிழகம் வந்த தம்பதியருக்கு பிறந்த பெண்ணுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இலங்கையில் குடும்பத்துடன் வசித்து ... மேலும் பார்க்க

கா்நாடக வங்கியில் ரூ.13 கோடி நகை கொள்ளை: தமிழகத்தைச் சோ்ந்த 3 போ் உள்பட 6 போ் கைது

கா்நாடக மாநிலம் தாவணகெரேவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூ.13 கோடி மதிப்பிலான 17 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த 6 பேரை அந்த மாநில போலீஸாா் கைது செய்தனா். இவா்களில் மூவா் தமிழகத்தைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது!

தமிழக சட்டப் பேரவை மூன்று நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (ஏப்.1) மீண்டும் கூடுகிறது. காலை 9.30 மணிக்கு பேரவை கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய விஷயங்கள் கு... மேலும் பார்க்க

வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது: வணிக வளாகத்துக்கு உத்தரவு

சென்னை அண்ணாநகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் (மால்) வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது என சென்னை மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணாநகரில் உள்ள வணிக வளாகத்தில் வாகனங்கள் நிறு... மேலும் பார்க்க