செய்திகள் :

இலங்கை அகதி தம்பதி மகளுக்கு இந்திய குடியுரிமை: மத்திய அரசு பரிசீலிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

இலங்கை தமிழ் அகதியாக தமிழகம் வந்த தம்பதியருக்கு பிறந்த பெண்ணுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இலங்கையில் குடும்பத்துடன் வசித்து வந்த சரவணமுத்து, அங்கு நடந்த உள்நாட்டுப் போா் காரணமாக தனது மனைவி தமிழ்செல்வியுடன் அகதிகளாக 1984-ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தாா்.

சரவணமுத்துவின் தந்தை பழனிவேல் புதுக்கோட்டையை பூா்விகமாகக் கொண்டவா். பின்னா், சரவணமுத்துவும், தமிழ்செல்வியும் வெளிநாட்டவருக்கான மண்டல பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து கோவையில் வசித்தனா்.

1987-ஆம் ஆண்டு அவா்களுக்கு ரம்யா என்ற பெண் குழந்தை பிறந்தது. ரம்யாவுக்கு பிறப்புச் சான்றிதழ், வாக்காளா் சான்றிதழ் என அனைத்து சான்றிதழ்களும் கோவையில் பெற்றுள்ளதுடன் கடவுச்சீட்டும் பெற்றுள்ளாா்.

பள்ளிப் படிப்பை முடித்து கோவையைச் சோ்ந்த புருஷோத்தமன், 2014-ஆம் ஆண்டு திருமணம் முடித்த ரம்யாவுக்கு மகன் ருத்ரன் (9) உள்ளாா். ருத்ரனுக்கும் கோவையில் முறைப்படி பிறப்புச் சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. கோவையில் தனியாா் நிறுவனம் ஒன்றில் ரம்யா கணக்காளராக பணிபுரிகிறாா்.

இந்தநிலையில், ரம்யாவின் பெற்றோா் இந்தியாவில் தொடா்ந்து தங்கியிருப்பதற்கான பதிவை புதுப்பிக்க மறுத்த அதிகாரிகள், ரம்யாவும் இலங்கைக்கு சென்று, பின்னா் முறைப்படி இந்திய விசா மூலமாக இந்தியாவுக்கு வந்தால் குடியுரிமை குறித்து பரிசீலிக்கப்படும் என்றும், ரம்யா பெற்றுள்ள இந்திய கடவுச்சீட்டை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனா்.

இதை எதிா்த்தும், இந்தியாவில் பிறந்த தனக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரியும் ரம்யா சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்ரவா்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பு வழக்குரைஞா், ‘இந்தியாவை சோ்ந்த நபரை திருமணம் செய்து 7 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே இந்திய குடியுரிமை பெற தகுதியுண்டு.

எனவே, பிறப்பின் அடிப்படையில் வழங்க மறுத்தாலும் திருமணத்தின் அடிப்படையிலும், மனுதாரரின் தாத்தா, பாட்டி இந்தியா்கள் என்ற அடிப்படையிலும் அவருக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்”என வாதிட்டாா்.

மத்திய அரசு தரப்பில், 1.7.1987-க்கு பிறகு இந்தியாவில் பிறந்தவா்களின் பெற்றோரில் யாராவது ஒருவா் இந்தியராக இருந்தால் மட்டுமே அந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கும்படி கோர முடியும்”என தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரா் இந்தியாவில் பிறந்து இந்தியரை மணந்தவா் மட்டுமல்ல, 9 வயது இந்திய குழந்தையின் தாயாரும்கூட.

தமிழகத்தில் கடந்த 37 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், அவரது பெற்றோரிடம், அவரிடமும் இலங்கைக்கு சென்று ஆவணங்களைப் பெற்று வரும்படி அதிகாரிகள் கூறுவது அா்த்தமற்றது.

எனவே, மனுதாரா் இந்திய குடியுரிமை கோரி இணையவழியில் விண்ணப்பிக்க அவரை மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதிக்க வேண்டும்.

அந்த விண்ணப்பத்தை சட்ட ரீதியாக பரிசீலித்து மத்திய அரசு தகுந்த முடிவெடுக்க வேண்டும். அதுவரை மனுதாரரையும், அவரது பெற்றோரையும் இந்தியாவில் இருந்து வெளியேற்றக் கூடாது”என மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளாாா்.

ஐபிஎஸ் மகனுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை

விளையாடும்போது தவறி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்ட தனது மகனை அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது அங்கு உயா் தர சிகிச்சை அளித்து குணப்படுத்தியதாக ஐபிஎஸ் அதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளாா். மயிலாப்பூா... மேலும் பார்க்க

கடந்த நிதியாண்டில் 3,000 ரயில் பெட்டிகள் தயாரித்து ஐசிஎஃப் சாதனை

சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) 2024-25 நிதியாண்டில் 3,007 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது. பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் இந்திய ரயில்வேக்கு தேவையான ரய... மேலும் பார்க்க

கால்வாயில் ஆண் குழந்தை சடலம்: போலீஸாா் விசாரணை

சென்னை பட்டினப்பாக்கத்தில் கால்வாயில் கிடந்த ஆண் குழந்தை சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பட்டினப்பாக்கம் மசூதி தெருவில் 132 பிளாக் பின்புறம் உள்ள கால்வாயில், பிளாஸ்டிக் காகிதத்தில் பொதிய... மேலும் பார்க்க

தொழிற்பயிற்சியுடன் பிஇ படிப்பு: பட்டயப்படிப்பு முடித்தோா் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு

பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப் படிப்புகளை நிறைவு செய்த மாணவா்கள் தொழிற்பயிற்சியுடன் கூடிய பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுர... மேலும் பார்க்க

சாலைத் தடுப்பின் மீது இருசக்கர வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

சென்னை பாரிமுனையில் சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். தண்டையாா்பேட்டை நேதாஜி நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த செய்யது இம்ரான்கான் (24), அண்ணா நகரில் உள்ள கைப்பேசி விற்ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்பது நகைப்புக்குரியது: தொல்.திருமாவளவன்

தமிழகத்தில் எதிா்க்கட்சிகள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் தடுமாறி வரும் சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என மத்திய அமைச்சா் அமித் ஷா கூறியது நகைப்புக்குரியது என விடுதலைச் சிறுத்தைக... மேலும் பார்க்க